சூர்யா ரசிகர்களே தயாரா? கருப்பு படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடக்கம் தெரியுமா?
Karuppu Ticket Booking: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் கருப்பு. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் எப்போது ஓபன் என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் தமிழில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தின் நடிகர் சூர்யா (Suriya) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இதில் இவர்கள் இருவருமே வழக்கறிஞராக நடித்துள்ளனர். இந்த் படமானது முழுவதுமாக வழக்கறிஞருக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் ஆறாம் தவறும் வழக்கறிஞர்களுக்கு கிடைக்கும் தண்டனை போன்ற கதையில் தயாராகியுள்ளது. இதை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள நிலையில், அதிரடி ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளுடன் தயாராகியுள்ளது. இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கருப்பு படத்தின் டிக்கெட் புக்கிங், 2026 மே 10ம் தேதி மாலை 4 மணி முதல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: விஜய், சூர்யா, தனுஷ் உடன் நடித்தது இப்படிதான் இருந்தது – நடிகை மமிதா பைஜூ நெகிழ்ச்சிப் பேச்சு!
கருப்பு திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:
#Karuppu Tamil Nadu Advance Bookings open tomorrow at 4 PM 🔥#Karuppu hits the big screens from May 14, 2026!
A @SaiAbhyankkar Musical 🎵@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy… pic.twitter.com/pYHYRHr0vn
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) May 9, 2026
கருப்பு படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்:
கருப்பு படத்தின் ட்ரெய்லர் இந்த சமயத்தில் வெளியாகியிருக்கவேண்டியது. தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் பிரச்சனைகள் உழன்றுவரும் நிலையில், அதன் முடிவிற்கு பிறகே கருப்பு பட ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அந்த வகையில் இன்னும் தமிழகத்திற்கு எதிர்பார்த்த அரசியல் பிரச்சனைகள் தீர்வு கிடைக்காத நிலையில், படக்குழு எப்போது இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: டப்பிங் பணியை நிறைவு செய்தது பரிமளா & கோ படக்குழு… ரிலீஸ் எப்போது
அதன்படி கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 மே 10ம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி இந்த படத்த்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெரும் என்றும், திரையரங்குகளில் சூர்யாவுக்கு இது மாஸ் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.