AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு ட்ரெய்லர் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் தகவல்

Karuppu Movie Trailer Update: தமிழ் சினிமாவில் தற்போது வெளியாக உள்ள பெரிய பட்ஜெட் படம் என்றால் அது கருப்பு. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாவது குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கருப்பு ட்ரெய்லர் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் தகவல்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 May 2026 10:56 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் 45-வது படமாக உருவானது கருப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களை விட இந்த கருப்பு படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர்களின் ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படத்தின் டீசரை பார்க்கையில் இது ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கருப்பு படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. தினமும் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் கருப்பு படத்தின் ட்ரெய்லர் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தின் ட்ரெய்லர் தெறிக்கும்:

படம் வெளியாக இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் தற்போது நிகழும் அரசியல் சூழல் காரணமாக படத்தின் ட்ரெய்லரை படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, கருப்பு படத்தின் ட்ரெய்லர் தெறிக்கும். விரைவில் வருகின்றது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கருப்பு படம் தாமதமாக வெளியாக இதுதான் காரணம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல் – என்ன ஆச்சு தெரியுமா?

Follow Us