AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் முடிவுக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Superstar Rajinikanth met DMK President M.K. Stalin | 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 04-ம் தேதி வெளியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியது வைரலாகி வருகின்றது.

தேர்தல் முடிவுக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் - மு.க.ஸ்டாலின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 May 2026 14:04 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் ஜெயிலர் 2 படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டாகி உள்ள நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வபோது அரசியல் தொடர்பான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இறுதியாக நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தல் குறித்தும் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு தமிழ் நாடு முழுவது நடைப்பெற்றது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் தவெக போட்டியிட்டது. இதில் நடிகர் தளபதி விஜய் தலைமையில் போட்டியிட்ட தவெக மாபெரும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

தமிழகத்தில் இந்த 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற தளபதி விஜய் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது தவெக உடன் இணைந்துள்ளது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். மேலும் தனது ஆதரவு ஸ்டாலினுக்கு எப்போதும் இருக்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் எப்படி இருக்கும்? வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சல்மான்கான் – நயன்தாராவின் படத்தில் வில்லன் வேடத்தில் இரு நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?

Follow Us