AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TVK Vijay: சொகுசு கார்கள்.. ரியல் எஸ்டேட் உட்பட.. தவெக தலைவர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

Tamil Nadu Election Results: கோலிவுட் சினிமா மற்றும் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தளபதி விஜய். இவர் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் களத்தை சந்தித்துள்ளார். அந்த வகையில் தவெக கட்சி தலைவர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு, சொகுசு கார்கள் என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

TVK Vijay: சொகுசு கார்கள்.. ரியல் எஸ்டேட் உட்பட.. தவெக தலைவர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
தளபதி விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 May 2026 13:44 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபல நடிகராகவும், அரசியல் கட்சியின் தலைவராகவும் அனைவராலும் அறியப்பட்டவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகாலமாக அரசியலில் ஈடுபட்டுவரும் நிலையில், இவருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் தனித்து நின்று, எந்தவித கூட்டங்களும் இல்லாமல் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam), 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் (Tamil Nadu Assembly elections) போட்டியிட்டிருந்தது. அந்த வகையில் இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள், இன்று 2026 மே 4ம் தேதியில் நடைபெற்றுவரும் நிலையில், விஜய்யின் தவெக கட்சியானது (TVK) முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என தெரியுமா?. அவரிடம் இருக்கும் சொகுசு கார்கள் மற்றும் ரியல் எஸ்டேட் எவ்வளவு இருக்கு தெரியுமா?. அந்த வகையில் விஜய்க்கு மொத்தமாக ரூ 600 கோடிகளுக்கு மேல் சொத்து மதிப்பு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் விஜய் – கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ

தளபதி விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா:

தவெக தலைவரும், நடிகருமான தளபதி விஜய், அண்மையில் தனது 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதில் விஜய்க்கு அசையும் சொத்துக்கள் ரூ404.58 கோடிகள் இருப்பதாகவும், அசையா சொத்து ரூ 198.62 கோடிகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். விஜய் பிரமாண பத்திரத்த்தில் கணிசமான பகுதி, ரூ 213 கோடிக்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகைகள் போன்ற எளிதில் பணமாக்கக்கூடிய சொத்துக்களில் உள்ளது. பிரீமியம் சொத்துக்கள், கொடைக்கானலில் விவசாய நிலம், மற்றும் பிற வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: முன்னிலையில் விஜய்யின் தவெக.. இயக்குநர் வெங்கட் பிரபு போட்ட பதிவு!

மேலும் விலையுயர்ந்த கார்களான BMW மாடல்கள், லெக்ஸஸ், மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்ற உயர் ரக சொகுசு கார்களையும் சொந்தமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உட்பட, சுமார் ரூ. 15.76 கோடி இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் கட்சி முன்னிலையில் குடும்பதுடன் கொண்டாடிய எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரின் குடும்பத்தினர்:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் அவரின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் கொண்டதை வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us