AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: விஜய் குறித்த தவறாக பேசிய நடிகர்.. AK64 படத்திலிருந்து விலக்கிய அஜித்?

Ajith And Vijay Friendship: கோலிவுட் சினிமாவில் சிறந்த போட்டி நடிகர்களாகவும், நண்பர்களாகவும் இருந்துவருபவர்கள் விஜய் மற்றும் அஜித். அந்த வகையில் சமீபகாலமாக வட்டங்களில், விஜய் பற்றி தவறாக பேசிய நடிகரை தனது படத்திலிருந்து அஜித் நீக்கியுள்ளாராம். அது உண்மையாக என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Ajith Kumar: விஜய் குறித்த தவறாக பேசிய நடிகர்.. AK64 படத்திலிருந்து விலக்கிய அஜித்?
அஜித் மற்றும் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 May 2026 16:06 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் இறுதியாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்கத்தில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் திரிஷா (Trisha) மற்றும் அஜித் குமார் (Ajith Kumar) இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது வெளியாகி ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்து. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து, முழுவதுமாக கார் ரேஸில் (Car Race) இறங்கிவிட்டார். கிட்டத்தட்ட பல சர்வதேச கார் ரேஸில் அஜித்தின் தனது அணியுடன் கலந்துகொண்டார். மேலும் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில், AK64 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித் ரேஸிங் பணிகளில் இருக்கிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார், AK64 படத்திலிருந்து பிரபல நடித்தார் ஒருவரை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் விஜயை பற்றி தவறாக பேசியிருந்த நிலையில், நண்பருக்காக அவரை அந்த படத்திலிருந்து மாற்ற சொன்னதாக வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு திரைப்பட ட்ரெய்லர் லோடிங்.. ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

விஜய் குறித்து தவறாக பேசிய நடிகரை நீக்கி அஜித் குமார்:

AK64 படத்தின் கதையும் மற்றும் ஸ்கிரிப்ட் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, நடிகர் தேர்வுப் பணிகள் தொடங்கினார். ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு, ஒரு முன்னணி தமிழ் நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சமீபத்தில் தனது அரசியல் உரைகளில் விஜய் அவர்களைப் பற்றி எதிர்மறையாகப் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: நான் தான் ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்கவிருந்தேன்.. ஆனால் – இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!

இது அஜித்திற்கு வருத்தத்தை அளித்தது, மேலும் அவர் உடனடியாக ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து, அவர் விஜய் பற்றி தவறாகப் பேசியதற்காக , அந்த பிரபல நடிகரை மாற்றும்மாறு கேட்டுக்கொண்டாராம். தளபதி விஜய்யின் நட்பை மதிக்கும்படியாக அஜித் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

Follow Us