AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: அஜித் குமாரின் AK64 படத்தின் நிலை என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!

AK64 Movie Shooting Update: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம்தான் AK64. தற்போது அஜித் குமார் கார் ரேஸில் பிசியாக இருந்துவரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் எப்போது நடிக்கிறார் என கேள்விகள் எழும்பிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Ajith Kumar: அஜித் குமாரின் AK64 படத்தின் நிலை என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Mar 2026 16:49 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்தவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படமானது, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது உலகளவில் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் (Car Race) இறங்கிவிட்டார். இவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக கார் ரேஸில் ஆற்வமாக இருந்துவருகிறார். இதையடுத்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Aadhik Ravichandran) கூட்டணியில் AK64 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி இறுதியில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் அது தொடர்பான எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதன் காரணமாக இந்த படமானது எந்த நிலையில் உள்ளது என மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர்

அஜித் குமாரின் AK64 திரைப்படத்தின் நிலை :

நடிகர் அஜித் குமார் வரும் 2027ம் ஆண்டு வரையிலும் கார் ரேஸிற்கான திட்டத்தை வைத்துள்ளார். இவர் இந்த 2026ம் ஆண்டில் படம் நடிப்பதாக கூறியிருந்த நிலையில், இந்த புது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்த படமானது குட் பேட் அக்லி திரைப்படத்தை போல இல்லாமல் பேமிலி ஆடியன்ஸிற்கான திரைப்படமாக AK64 படம் உருவாகவுள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: அரசன் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு… வைரலாகும் போட்டோஸ்

அந்த விதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கும் அஜித் துபாய் கார் ரேஸ் பயிற்சியை முடித்தவுடன், 2026 பிப்ரவரி இறுதியில் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்தவித தகவலும் அல்லது அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து அஜித்தின் 64வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயங்குவதாகவும் தகவல் பரவியது. ஆனால் அஜித்தின் AK64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 மே மாதத்தில் தொடங்குவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அஜித் குமாரின் AK64 திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து வைரலாகும் பதிவு:

நடிகர் அஜித் குமார் தற்போது தயாரிப்பாளராக பிலிம் சேம்பரில் பதிவு செய்துள்ளார். அவர் அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கிறாராம். இந்த நிறுவனத்தின் கீழ் முதல் படமாக, அஜித் குமாரின் கார் ரேஸ் ஆவணப்படம் வெளியாகவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us