AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: இனி ஹீரோ மட்டும் கிடையாது.. அஜித் குமாரின் புதிய அவதாரம்.. என்னனு தெரியுமா?

Ajith Kumars New Avatar: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தவருபவர் அஜித் குமார். இவர் தொடர்ந்து கார் ரேஸ் மற்றும் சினிமாவிலும் இருந்துவருகிறார். அந்த வகையில் கார் ரேஸர் மற்றும் நடிகராக இருந்த இவர், தற்போது புது அவதாரம் ஒன்று எடுத்துள்ளாராம். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Ajith Kumar: இனி ஹீரோ மட்டும் கிடையாது.. அஜித் குமாரின் புதிய அவதாரம்.. என்னனு தெரியுமா?
அஜித் குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Mar 2026 10:53 AM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் லிஸ்டில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் எப்படியாவது ஆண்டுக்கு ஒன்று அல்லது 2 படங்கள் வெளியாகிவரும். ஆனால் சில ஆண்டுகளாக அஜித் குமாரின் நடிப்பில் தொடர்ந்து பெரிதாக படங்கள் வெளியாகாவில்லை. கடந்த 2024ம் ஆண்டில் எந்த படமும் வெளியாகாத நிலையில், 2025ம் ஆண்டு விடாமுயற்சி (Vidaamuyrchi) மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படங்களில் குட் பேட் அக்லி என்ற திரைப்படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்திருந்தது. இதையடுத்து அஜித் தொடர்ந்து கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக கார் ரேஸ் (Car Race) போட்டிகள் மற்றும் பயிற்சியில் இருந்துவருகிறார். துபாய், இத்தாலி, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்றிருந்த 24H கார் ரேஸ் பயிற்சியில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

இதில் இந்தியா மற்றும் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதத்தில் அவர் பெருமைப் படுத்தியிருந்தார் என கூறலாம். கார் ரேஸர் மற்றும் நாயகனாக அஜித் குமார் இருந்துவந்த நிலையில், தற்போது புதிய அவதாரம் ஒன்று எடுத்துள்ளாராம். அது என்னனு தெரியுமா? அஜித் குமார் தென்னிந்திய திரைப்பட வர்த்தசபையில் (பிலிம் சேம்பர்) (Film Chamber) பதிவு செய்துள்ளாராம். அவர் அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி என்ற பெயரில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மணிரத்னம் சார் சொன்ன ஒரு வார்த்தை.. நாள் முழுவதும் அப்படித்தான் இருந்தேன் – திரிஷா சொன்ன விஷயம்!

தென்னிந்திய பிலிம்ஸ் சேம்பரில் இணைந்த நடிகர் அஜித் குமார்:

பிலிம் சேம்பர் என்பது, திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையிடுபவர்களை ஆகியோரை ஒருங்கிணைக்கும். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் தயாரிப்பாளராக தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் என்ற பெயரில் அவர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ட்ரெண்டிங் கதாநாயகியாக சாரா அர்ஜுன்.. துரந்தர் படத்தில் நடிப்பதற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மேலும் ரூ 2.56 லட்சத்தை செலுத்தி, ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் முடிவானது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை இவர் தயாரிப்பாளராகிவிட்டால் படங்களில் நடிக்கமாட்டாரா என தங்களின் வேதனையை தெரிவித்து வருகிறார்கள்.

அஜித் குமாரின் கார் ரேஸ் அட்டவணை குறித்த பதிவு:

நடிகர் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், AK64 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், ஷூட்டிங் 2026 பிப்ரவரி மதத்தின் இறுதியில் தொடங்கிவைத்தாகி இருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தில் பல குழப்படிகள் ஏற்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அஜித்தின் 64வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குவதாக கூறப்படுகிறது. இதில் எது உண்மை என தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us