AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sara Arjun: ட்ரெண்டிங் கதாநாயகியாக சாரா அர்ஜுன்.. துரந்தர் படத்தில் நடிப்பதற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sara Arjuns Salary: தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து, தற்போது பான் இந்திய கதாநாயகியாக கொண்டாடப்படுபவர் சாரா அர்ஜுன். இவர் துரந்தர் 1 மற்றும் 2ல் லீட் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், இதில் நடிப்பதற்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Mar 2026 16:31 PM IST
நடிகை சாரா அர்ஜுன் தனது சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்துவருகிறார். குழந்தை நட்சத்திரமாக பல படமங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழில் விக்ரமின் மகளாக தெய்வ திருமகள் படத்தில் நடித்து மக்களால் கொண்டாடப்பட்டிருந்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்து இவருக்கு தமிழில் தொடர்ந்து படங்கள் அமைந்தது என்று கூறலாம்.

1 / 5
இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தார். அதிலும் இவருக்கு தமிழிகள் மிகவும் சிறப்பான வரவேற்பை கொடுத்த படமாக சைவம் என்ற படம் அமைந்திருந்தது. இதையடுத்து பல ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் பருவ நந்தினி வேடத்தில் நடித்திருந்தார்.

2 / 5
இவ்வாறு ஒட்டுமொத்த தென்னிந்திய மக்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாகவும், இளம் நடிகையாகவும் பிரபலமாகியிருந்தார். இதையடுத்து கதாநாயகியாக இவர் அறிமுகமாகியிருந்த மிக பிரம்மாண்ட படம்தான் துரந்தர். இதில் தன்னைவிடவும் 20 வயது மூத்த நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் கதாநாயகியாக முதல் படமே கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

3 / 5
இந்நிலையில் இவர் இதையடுத்து துரந்தர் 1 படத்தின் தொடர்ச்சியான, துரந்தர் 2:  தி ரிவென்ஜ் படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்திலும் லீட் கதாநாயகியாக இவர் காட்டப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவருகிறார். அந்த வகையில் இந்த இரு படங்களிலும் நடிப்பதற்கு இவர் மொத்தம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளர் தெரியுமா?

4 / 5
நடிகை சாரா அர்ஜுன், துரந்தர் 1 மற்றும் துரந்தர் தி ரிவென்ஜ் என இரு திரைப்படங்களிலும் நடிப்பதற்கு, தலா ரூ 1 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம். அறிமுக கதாநாயகியாக இவருக்கு ரூ 1 கோடி சம்பளம் கிடைத்திருப்பது பெரிய விஷயம். இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இவருக்கு அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் வரிசைகட்டி நிற்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

5 / 5
Follow Us