AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ஓம் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் ஒன்லைன்? 

OM Movie Runnig Time And Oneline Update | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் ஒன் லைன் மற்றும் ரன்னிங் டைம் என்ன என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ஓம் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் ஒன்லைன்? 
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Nov 2026 20:44 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் சினிமா வரை பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன போது இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்ற கமெண்ட்களை கடந்து தற்போது ஹாலிவுட் வரை பிரபலமான நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டில் முன்னதாக நடிகர் தனுஷின் நடிப்பில் கர படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஓம் சாப்டர் 1. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் ஓம் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் ஒன்லைன் இதுவா?

இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது வெளியான தகவலின்படி, இந்தத் திரைப்படத்தின் இறுதி வடிவம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் (160 நிமிடங்கள்) கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் சாய் பல்லவி ஒரு காவல் அதிகாரியாகவும், தனுஷ் ஒரு ரகசியக் காவல் அதிகாரியாகவும் (உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்) நடிக்கின்றனர். மம்முட்டி படத்தின் முதன்மை வில்லனாக நடிக்கிறார்.

சந்தனக் கடத்தலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், மொத்தம் 1000 டன் சந்தனம் கடத்தப்படவிருக்கிறது. இதில் 300 டன் வெற்றிகரமாகக் கடத்தப்பட்டுவிடுகிறது. ஆனால், மீதமுள்ள 700 டன்னைச் கடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் கரு.

Also Read… Scene Movie: ஓ ஹிட்டா.. சீன் திரைப்பட FDFS பார்த்த இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ajith Kumar: அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ!

Follow Us