AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லக்சுரி பட்ஜெட் குறித்து முனியம்மாளிடம் கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வாரம் வாரம் லக்சுரி பட்ஜெட்டின் போது பிரச்சனை செய்து கொண்டு இருந்த முனியம்மாள் இந்த வாரம் சரியாக அதனை செய்யாத காரணத்தால் விஜய் சேதுபதி அவரிடம் கேள்வி எழுப்புகிறார்.

லக்சுரி பட்ஜெட் குறித்து முனியம்மாளிடம் கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Nov 2026 19:14 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இந்த ஆண்டில் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல சம்பவங்களும் நடைப்பெற்று வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து கடந்த 9-வது சீசன் வரை இதுவரை இல்லாத பல விசயங்களை இந்த 10-வது சீசனில் நிகழ்ச்சி குழு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் பொது மக்களுக்காக ஒரு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதற்கு காமென் மேன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்த. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 5 போட்டியாளர்கள் அதிலிருந்து அனுப்பட்டனர். அதில் ஒரு போட்டியாளர் தான் முனியம்மாள். காமென் மேன் நிகழ்ச்சியில் வெகுலியாக தெரிந்த இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் அப்படி இல்லை என்று பார்வையாளர்களே கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் போட்டி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து பல சண்டைகளுக்கு ஆரம்ப புள்ளியாக முனியம்மாள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரிய அளவில் அவரிடம் கேள்வி எழுப்பாத விஜய் சேதுபதி கடந்த சில வாரங்களாக முகத்திற்கு நேராக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் முனியம்மாளிடம் கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் லக்சுரி பட்ஜெட்டிற்காக விளையாடுபவர்களிடம் முனியம்மாள் தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். இதனால் கடந்த வாரம் இறுதியில் விஜய் சேதுபதி அவரையே இந்த வாரம் லக்சுரி பட்ஜெட்டை விளையாட கூறினார். அப்படி அவர் விளையாட சென்ற போது சரியான அளவிற்கு சரியான விலையை பொருட்களுக்கு போட தவறினார். மேலும் கொடுத்த பட்ஜெட்டைவிட அதிகமாக பொருட்களை வாங்கினால் வாங்கியதில் இருந்து பாதி பொருட்கள் மட்டுமே அனுப்பப்படும் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தும் அவர்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்கியதால் பட்ஜெட் பாதியாக குறைக்கப்பட்டது. இதுகுறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Scene: ஃபன் இருக்கு.. திரில்லர் இருக்கு.. சர்ப்ரைஸ் இருக்கு.. சூர்யா – நஸ்ரியாவின் சீன் திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Nayanthara: தெய்வசக்தி Vs தீயசக்தி.. 90ஸ் படம் போல இருக்கிறதா மூக்குத்தி அம்மன் 2..? – விமர்சனங்கள் இதோ!

Follow Us