ரசிகர்கள் ஷாக்.. விரைவில் விஜய் டிவியில் முடிவுக்கு வரும் சீரியல்? எந்த தொடர்-னு தெரியுமா?
Vijay TV Serial : தமிழில் விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் தற்போது பிரபல சீரியல் ஒன்று இறுதிக்கட்டத்திற்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த சீரியல் விரைவில் முடிவடைகிறதாம். எந்த சீரியல் என விவரமாக பார்க்கலாம்.
ஒட்டுமொத்த ரசிகர்களை மத்தியில் சினிமா எந்த அளவிற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ, அதுபோன்று தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் தமிழில் கிட்டத்தட்ட 3 பிரபல தொலைக்காட்சிகள் சீரியல்கள் (Serials) மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் (Reality Shows) டிஆர்பியில் (TRP) பட்டைய கிளப்பிவருகிறது. அதிலும் மக்கள் மத்தியில் சீரியல்கள் மூலம் மிகவும் அதிகம் வரவேற்கப்படும் தொலைக்காட்சியாக விஜய் டிவி (VIjay TV) இருக்கிறது. இந்த தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandiyan Stores), அய்யனார் துணை (Ayyanar Thunai), சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) என பல டிஆர்பி அதிகம் பெற்றுவரும் சீரியல்கள் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாம்.
அது எந்த சீரியல் என தெரியுமா?, வேறு எதுவுமில்லை சக்திவேல் சீரியல்தான் (Sakthivel Serial). இந்த சீரியல் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், கிளைமேக்ஸ் எட்ட உள்ள நிலையில், விரைவில் நிறைவடைகிறதாம். இந்த தகவலானது சக்திவேல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சக்திவேல் சீரியல் நிறைவு குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:
View this post on Instagram
விஜய் தொலைக்காட்சியில் சக்திவேல் சீசன் 1 நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டில் தொடங்கிய நிலையில், கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடைந்திருந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக வெளியாகிவந்த இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சக்திவேல் சீசன் 2 சீரியல் 2025 அக்டோபர் 21ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த் சீரியலானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. இந்த சீரியலானது கடந்த 2015ம் ஆண்டில் வெளியான புது கவிதை என்ற சீரியலின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கடைசி 30 நிமிடங்கள் கண்ணீரில் கலங்கடிக்கும்.. ஓடிடியில் வெளியான Couple Friendly எப்படி இருக்கு?
இந்த சீரியலானது திங்கள் முதல் சனி வரை மதியம் 1:30 மணியளவில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த வகையில் தற்போது இதன் கிளைமேக்ஸ் காட்சி எட்டப்பட்ட நிலையில், விரைவில் நிறைவுக்கு வருகிறதாம். இது தொடர்பான தகவல்கள் தற்போது சக்திவேல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் முடிவிற்கு பிறகு புது சீரியல் ஒன்றும் வருவதாக கூறப்படுகிறது. அந்த சீரியல் குறித்த இன்னும் ஏறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.