AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொதுமக்கள் வியக்கும் வகையில் பொங்கல் பரிசு காத்திருக்கிறது.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

Pongal Gift Surprise: திருச்செங்கோட்டில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி தின விழாவில் பங்கேற்ற கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, வரும் பொங்கல் பண்டிகைக்குப் பொதுமக்களுக்கு மிக உயர் தரத்திலான இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நெசவாளர்களை ஊக்குவிப்பதுடன், காட்டன் மற்றும் பட்டுச் சேலை உற்பத்திப் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பொதுமக்கள் வியக்கும் வகையில் பொங்கல் பரிசு காத்திருக்கிறது.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!!
அமைச்சர் விஜய் பாலாஜி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 Aug 2026 08:50 AM IST

நாமக்கல், ஆகஸ்ட் 09: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 12-வது தேசிய கைத்தறி தின விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கைத்தறி நெசவுத் தொழிலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் வகையிலும், நெசவாளர்களின் திறமைகளைக் கௌரவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், ஆடை வடிவமைப்புத் துறை மாணவிகள் மற்றும் மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான நெசவாளர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மாணவிகளின் கலைப் படைப்புகளைப் பாராட்டிப் பரிசுகளை வழங்கியதுடன், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழக அரசு வழங்கவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகள் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

இதையும் படிக்க: தவெகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகள் உருவாக்கம்.. புதிய மா.செக்கள் நியமனம்!!

5 மணி நேரத்தில் 1000 ஓவியங்கள்:

தேசிய கைத்தறி தின விழாவின் முக்கிய அம்சமாக ஆடை வடிவமைப்பு மாணவிகளின் ஓவியச் சாதனை நிகழ்ச்சி அமைந்தது. இதில் 100 ஆடை வடிவமைப்பு மாணவிகள் ஒன்றுதிரண்டு, வெறும் 5 மணி நேர இடைவெளியில் கைத்தறி நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பு சார்ந்த 1000 அழகான ஓவியங்களை வரைந்து சாதனை படைத்தனர். மாணவிகளால் உருவாக்கப்பட்ட இந்த நேர்த்தியான ஓவியங்கள், நெசவுத் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் நாமக்கல், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மூத்த கைத்தறி நெசவாளர்களுக்குப் பரிசுகளாகவும் நினைவுக் பரிசுகளாகவும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தங்கைகளுக்குக் கொடுப்பது போன்ற தரம்:

நிகழ்ச்சியில் மேடையில் உரையாற்றிய கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, பொங்கல் இலவச வேட்டி-சேலைத் திட்டம் குறித்துப் பேசுகையில், “கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி மற்றும் சேலைகளின் தரம் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்தன. அந்த வேட்டி-சேலைகளைப் பொதுமக்கள் வாங்குவதா அல்லது வேண்டாமா என்று யோசிக்கும் நிலையே நிலவி வந்தது. ஆனால், நமது அரசு பொறுப்பேற்ற பிறகு நிலைமை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

வரும் பொங்கல் பண்டிகைக்குக் கொடுக்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் நமது சொந்த அக்கா, தங்கைகளுக்குக் கொடுத்தால் எந்த அளவிற்குப் பார்த்துப் பார்த்துத் தரமாகத் தேர்ந்தெடுப்போமோ, அதேபோன்று மிக உயர்ந்த தரத்தில் தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கேட்டு வாங்கக்கூடிய அளவிற்குப் புதிய வடிவமைப்பு மற்றும் உயர்தரத்தில் நெசவாளர்கள் இவற்றை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

நெசவாளர்களுக்கான புதிய திட்டங்கள்:

தமிழக அரசால் விநியோகிக்கப்படும் இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு பகுதி மிக முக்கியப் பங்காற்றி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மண்டல வாரியான நெசவுச் சிறப்புகளைக் குறிப்பிட்ட அவர், ராசிபுரத்தில் பட்டுச் சேலைகளும், திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துண்டு நெசவுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!

தொடர்ந்து பேசிய அமைச்சர், சின்னப்பம்பட்டி பகுதியில் காட்டன் சேலைகள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், ராசிபுரம் பகுதியில் பட்டுச்சேலை நெசவுப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான முன்மொழிவுகள் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்துத் திட்டங்களும் விரைவாகச் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

Follow Us