விருத்தாச்சலத்தில் மாணவர் விடுதி, தீயணைப்பு நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு..
விருத்தாச்சலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலை ஆறடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் உணவு போதுமான அளவில் வழங்கப்படவில்லை, கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மின்விளக்கு வசதி இல்லை என்றும், விடுதி கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களையும் பிரேமலதா ஆய்வு செய்தார். இதையடுத்து, கடலூர் சாலையில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், விருத்தாசலம்-கடலூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் தனது நடவடிக்கையால் அமைக்கப்பட்ட சோலார் மின்விளக்குகளை ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளிடம் அதன் பயன் குறித்து கேட்டறிந்தார்.
விருத்தாச்சலத்தில் மாணவர் விடுதி, தீயணைப்பு நிலையத்தில் பிரேமலதா
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்ட் அமைப்பு..
கோழிக்கூண்டை திருட முடியாமல் 2 கோழிகளுடன் தப்பிய வாலிபர்கள்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி