நடிகை கயாது லோஹர், நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் செய்து வருகின்றனர். ஆனால், இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கயாது லோஹர் மட்டும் தொடர்ந்து பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியது.