அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள்..
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக பெரியவர்களுக்கு 60 படுக்கைகள், குழந்தைகளுக்கு 40 படுக்கைகள் என தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். பத்மநாபன் தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளிகளுக்கு தேவையான ஐ.வி. திரவங்கள், மருந்துகள், ரத்தம் மற்றும் பிளாஸ்மா உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக பெரியவர்களுக்கு 60 படுக்கைகள், குழந்தைகளுக்கு 40 படுக்கைகள் என தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். பத்மநாபன் தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளிகளுக்கு தேவையான ஐ.வி. திரவங்கள், மருந்துகள், ரத்தம் மற்றும் பிளாஸ்மா உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பதாகவும் அவர் கூறினார். அதிக காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஏற்பட்டால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், குறிப்பாக NSAID வகை வலி நிவாரணிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
டெங்கு நோயின் முக்கியமான கட்டத்தில் கடுமையான வயிற்றுவலி, வாந்தி, உடல் சோர்வு மற்றும் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என தெரிவித்தார். மேலும், ஏடிஸ் கொசுக்கள் தேங்கியுள்ள சுத்தமான நீரில் உற்பத்தியாகும் என்பதால், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தற்போது மருத்துவமனையில் ஓரிரு டெங்கு நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்ட் அமைப்பு..
கோழிக்கூண்டை திருட முடியாமல் 2 கோழிகளுடன் தப்பிய வாலிபர்கள்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி
துறையூர் மோட்டார் வாகன அலுவலக ஊழியர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைர
