AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஜெம் வீரமணி வழக்கு.. திமுகவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன்!

ஜெம் வீரமணி வழக்கு.. திமுகவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன்!

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Sep 2026 14:40 PM IST

Gem Veeramani Case: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு முதலமைச்சரின் தனி கண்காணிப்பில் உள்ளதாகவும், இதில் தவெக ஆட்சியில் யாரும் தப்ப முடியாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், முந்தைய திமுக ஆட்சியில் இந்த வழக்கைக் கைவிட உத்தரவிட்டது யார் எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், ரகுபதியின் கருத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்.23: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெம் வீரமணி’ மீதான பாலியல் வழக்கு தொடர்பாக, தவெகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்மோகன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, இந்த விவகாரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், வழக்கு விசாரணையை மந்தப்படுத்தியது யார் என்பது குறித்தும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், இந்த வழக்கு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

வீடியோ ஆதாரம் மற்றும் ரகுபதிக்குக் கண்டனம்:

செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதியின் அண்மைய பேச்சைச் சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்தார். “வீடியோ கிளாரிட்டி மற்றும் ஹெச்டி தரம் குறித்துப் பேசுவதற்கு முன்பாகக் கொஞ்சம் மனசாட்சியும் மனிதாபிமானமும் இருக்க வேண்டும்” என்று சாடிய அவர், அந்த வீடியோவின் தரம் எப்படி இருந்தாலும், அதில் உள்ள குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை உணர்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருவதாகவும், பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள் முன்வந்து புகார் அளிக்கும் சூழலில், பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் திமுகவினர் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Follow Us