விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும்போது, நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு அழகான காட்சிகள் கிடைக்கும். அந்த வகையில், நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் பகிர்ந்துள்ள ஒரு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில், பின்னணியில் எண்ணற்ற நட்சத்திரங்களுடன் பால்வெளி மண்டலம் தென்படுகிறது. அதற்கு நடுவே வெள்ளி கிரகம், பூமியின் வளிமண்டலத்தை கடந்து உதயமாகும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் சிவப்பு நிற ஒளிர்வு காணப்படுகிறது. அதன் கீழ்பகுதியில் புயல் பகுதிகளில் மின்னல் ஒளிர்வும் பதிவாகியுள்ளது.