AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருச்சியில் 590 பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

திருச்சியில் 590 பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

Deepan
Deepan | Updated On: 22 Sep 2026 23:49 PM IST

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்தும் வகையிலும் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்தும் வகையிலும் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு, காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் 415 பள்ளிகளில் சுமார் 36,800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில் 33 பள்ளிகளில் 5,845 மாணவர்களும், நகராட்சிப் பகுதிகளில் 27 பள்ளிகளில் 5,567 மாணவர்களும் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

Published on: Sep 22, 2026 08:48 PM
Follow Us