வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் வாங்கும் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல் எரிவாயு இணைப்புடன் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை, அதாவது கேஒய்சியை வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 27 கோடியே 43 லட்சம் உள்நாட்டு எல்பிஜி நுகர்வோர் ஆதார் சரிபார்ப்பை முடித்துள்ளனர்.