சேலம் ராஜகணபதி கோவிலில் தேரோட்ட வைபவம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோவிலான ராஜகணபதி கோயில் சின்ன கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 12 நாட்கள் பிரம்மோற்சவ வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராஜகணபதி கோவிலுக்கு கும்பாபிஷேக வைப்பகம் நடைபெற்றது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோவிலான ராஜகணபதி கோயில் சின்ன கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 12 நாட்கள் பிரம்மோற்சவ வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராஜகணபதி கோவிலுக்கு கும்பாபிஷேக வைப்பகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி தொடங்கி நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் வைப்பவங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன. மாலையில் ஒவ்வொரு நாளும் விநாயகர் பெருமான் பல்வேறு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாளான இன்று தேரோட்ட வைபவம் நடைபெற்றது. முன்னதாக ராஜகணபதி மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து பட்டாடைகள் உடுத்தப்பட்டு பல்வேறு வாசனை மலர்களால் மூலவர் ராஜகணபதிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டன பின்னர் உற்சவமூர்த்தியான விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முதன் முறையாக தேரோட்ட நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ விநாயகப் பெருமான் எழுந்தருள செய்தனர்.
