சவுதி அரேபியா மற்றும் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. மத்திய கிழக்கின் பாதுகாப்பு சூழல் சிக்கலான நிலையில் இருப்பதாகவும், எதிர்பாராத வகையில் பதற்றம் அதிகரிக்கலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், விமானங்கள் ரத்து செய்யப்படுவது, வான்வெளி மூடப்படுவது போன்ற பயண பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.