ஆதவ் அர்ஜுனாவுக்கு அனுபவம் குறைச்சல்.. பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு!
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினர் மிரட்ட பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாது என கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினர் மிரட்ட பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாது. இது போன்ற பொய் வழக்குகளை சந்தித்துதான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறோம். அதிமுகவின் வெற்றியை தடுக்க இவர்கள் செய்யும் முயற்சி அனைத்தும் பொய்த்துப்போகும் என்று அவர் கூறியுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அனுபவம் குறைச்சல். பல கட்சி மாறி வந்தவர். இப்போது மந்திரி ஆகிவிட்டதால் அவருக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. அதிமுகவின் பாரம்பரியம் பெரியது. 55 ஆண்டை இந்த இயக்கம் கடந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு அனுபவம் குறைச்சல் - பொள்ளாச்சி ஜெயராமன்!
மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
இடுக்கியில் நிலச்சரிவு: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 5 குடும்பங்கள்
ராமேஸ்வரத்தில் கோலாகலமாக நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா!
