குட்டியுடன் ஆற்றில் குளித்த யானைகள்: தாய் யானையின் வைரல் வீடியோ..
கோவை மதுக்கரை அருகே குட்டி யானையுடன் ஆற்றில் குளித்து மகிழ்ந்த 3 காட்டு யானைகளின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மதுக்கரை சுற்றுவட்டாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், புதுப்பதி கிராமம் அருகே உள்ள ஆற்றுக்கு குட்டியுடன் வந்த யானைகள் தண்ணீர் அருந்தி, நீரில் குளித்து மகிழ்ந்தன.

பின்னர் வனப்பகுதியை நோக்கி சென்றபோது, குட்டி யானையின் முன்னங்காலில் காயம் இருப்பது தெரியவந்தது. வலியால் மெதுவாக தள்ளாடி நடந்த குட்டியை தாய் யானை தனது தும்பிக்கையால் அரவணைத்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றது.
இந்த நெகிழ்ச்சியான காட்சியை அவ்வழியாகச் சென்றவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காயமடைந்த குட்டி யானைக்கு வனத்துறை மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.