AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ராமேஸ்வரத்தில் கோலாகலமாக நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா.. பூத்தட்டு ஊர்வலம், சிறப்பு அபிஷேகம்!!

ராமேஸ்வரத்தில் கோலாகலமாக நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா.. பூத்தட்டு ஊர்வலம், சிறப்பு அபிஷேகம்!!

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Sep 2026 14:24 PM IST

Rameswaram Akkasalai Vinayagar Temple: ராமேஸ்வரம் கீழரத வீதியில் உள்ள ஸ்ரீ அக்கசாலை விநாயகர் திருக்கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு விமர்சையான விழா நடைபெற்றது. விஸ்வகர்ம ஐந்தொழில் சங்கம் சார்பில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்படும் இவ்விழாவில், பெண்கள் பூத்தட்டு ஏந்தி நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்து ஸ்ரீ விஸ்வகர்மாவுக்கு சிறப்புப் பூவாள அர்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

புனிதத் தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் கீழரத வீதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ அக்கசாலை விநாயகர் திருக்கோவிலும் ஒன்றாகும். உலகப் படைப்புக்கும் கட்டிடக் கலை மற்றும் கைவினைத் தொழில்களுக்கும் மூலக் கடவுளாகப் போற்றப்படும் ஸ்ரீ விஸ்வகர்மா பகவானைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரம் விஸ்வகர்ம ஐந்தொழில் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட இத்திருக்கோவிலில், பாரம்பரியம் மாறாமல் பக்திச் பரவசத்துடன் இந்த ஆண்டிற்கான விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

30 ஆண்டு கால பாரம்பரிய பூத்தட்டு ஊர்வலம்:

ராமேஸ்வரம் விஸ்வகர்ம ஐந்தொழில் சங்கத்தின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இந்த ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்ற வண்ணமயமான ஊர்வலம் நடைபெற்றது. குறிப்பாக, திரளான பெண்கள் தங்களது கைகளில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தட்டுகளை ஏந்தி வர, மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் தொடங்கியது. ராமேஸ்வரத்தின் நான்கு ரத வீதிகளின் வழியாகப் பக்திப் பாடல்கள் முழங்க வலம் வந்த இந்த பூத்தட்டு ஊர்வலம், இறுதியாக ஸ்ரீ அக்கசாலை விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.

Published on: Sep 21, 2026 02:23 PM
Follow Us