மூதாட்டி வீட்டில் உணவு அருந்தி குறைகளை கேட்ட அமைச்சர் என். ஆனந்த்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அவர், அவருடன் அமர்ந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்தினார்.

தொடர்ந்து, மூதாட்டியிடம் குடும்ப நிலை, அப்பகுதி மக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் இயல்பாக அமர்ந்து உணவு அருந்தி, குறைகளை கேட்டறிந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து, மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.