AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ராதாவுக்கு ரூ.5,000 கோடிக்கு சொத்து இருக்கும்.. பரபரப்பை கிளப்பிய நடிகை அம்பிகா!!

“ராதாவுக்கு ரூ.5,000 கோடிக்கு சொத்து இருக்கும்”.. பரபரப்பை கிளப்பிய நடிகை அம்பிகா!!

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Sep 2026 14:57 PM IST

Ambika Slams Sister Radha Over Cheque Fraud Allegations: நடிகை ராதாவின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடி என்றும், தான் உண்மையைக் கூறினால் அவர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் நடிகை அம்பிகா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட காசோலைகளை வங்கியில் நிறுத்தியது ராதா தான் என்றும், சொத்துப் பிரிவினை கணக்கில் தனக்கு ரூ.97 கோடி வர வேண்டும் என்றும் அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, செப்.23: தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே நிலவி வரும் சொத்துப் பிரச்சனை தற்போது காவல்நிலையம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதா, தனது கையெழுத்திடப்பட்ட காசோலைகளைப் பயன்படுத்தி சுமார் ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட காசோலை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தும், குடும்பச் சொத்துப் பிரிவினையின் பின்னணியை விளக்கியும் நடிகை அம்பிகா செய்தியாளர்களைச் சந்தித்துத் தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

காசோலை நிறுத்தம் மற்றும் ரூ.97 கோடி நிலுவை:

செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை அம்பிகா, காசோலை மோசடி விவகாரத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர் தான் தான் என்று தெரிவித்தார். “எனக்குக் காசோலைகளை வழங்கியதே நடிகை ராதா தான்; ஆனால் அவற்றை வங்கியில் செலுத்திய போது பணப் பரிவர்த்தனையை நிறுத்தி வைத்ததும் அவரே தான். சொத்துகளைப் பிரித்த வகையில் ராதா தரப்பில் இருந்து எனக்கு ரூ.97 கோடி வர வேண்டும், அதற்காகவே எனக்கு 5 காசோலைகள் வழங்கப்பட்டன. ராதா கையெழுத்திட்டுக்கொடுத்த காசோலை அவரது வீட்டில் தான் இருந்தது; அவரது வீட்டில் உள்ள காசோலையை நான் எப்படித் திருட முடியும்? காசோலையைக் கொடுத்ததும் ராதா தான், அதை நிறுத்தியதும் ராதா தான், இறுதியில் பணம் வராமல் பாதிக்கப்பட்டதும் நான் தான்” என்று அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

Published on: Sep 23, 2026 02:54 PM
Follow Us