துறையூர் மோட்டார் வாகன அலுவலக ஊழியர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்
திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம் வாலசிராமணியைச் சேர்ந்த விஜி என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

மோட்டார் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகளின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து வழங்குவதற்காக, அவர்களிடம் பணம் பெறுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுநர் உரிமம் பெற வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி
துறையூர் மோட்டார் வாகன அலுவலக ஊழியர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைர
"ராதாவுக்கு ரூ.5,000 கோடிக்கு சொத்து இருக்கும்".. அம்பிகா!!
ஜெம் வீரமணி வழக்கு.. சரமாரி கேள்வி எழுப்பிய அமைச்சர்!