பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி தொடக்கம்
சேலம் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இதனை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கண்காட்சியில் 18 சித்தர்கள் செட், கிரிவலம், சோளிங்கர், திருநாவுக்கரசர், பஞ்சஸ்தலம், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அப்துல் கலாம், திருவள்ளுவர், விவேகானந்தர் மற்றும் முதல்வர் விஜய் உருவம் பதித்த பொம்மைகளும் புதிய வரவாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராம்செட், குபேரன் செட், கும்பகோணம் செட், ஆழ்வார் செட், பழக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட வகையான பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. ரூ.15 முதல் ரூ.32,500 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி
துறையூர் மோட்டார் வாகன அலுவலக ஊழியர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைர
"ராதாவுக்கு ரூ.5,000 கோடிக்கு சொத்து இருக்கும்".. அம்பிகா!!
ஜெம் வீரமணி வழக்கு.. சரமாரி கேள்வி எழுப்பிய அமைச்சர்!