குரங்கு கையில் கிடைத்த தங்கம் போல விஜய்யின் ஆட்சி.. இப்படி காஸ்ட்லி முதல்வர் நமக்கு தேவையா? மதுராந்தகத்தில் எடப்பாடி கடும் விமர்சனம்!
Edappadi Palaniswami Campaign : குரங்கு கையில் கிடைத்த தங்க மோதிரம் போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி இருப்பதாகவும், சுயதேவைக்காக மக்கள் பணத்தை செலவு செய்யும் காட்ஸ்லியான முதல்வர் தமிழகத்துக்கு தேவையா என்றும் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: முதல்வர் விஜய் லண்டன் சென்று முதலீடு ஈர்த்ததாக கூறியுள்ளார். அந்த நிறுவனங்களுடன் தமிழகத்திலேயே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாம். தமிழக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றாமல் கார் பந்தயம் நடத்துவதற்கு 2 ஆயிரம் ஏக்கரில் நிலம் வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. தவெக அரசு 4 மாதங்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. ஒரு லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது. இந்த கடனை அடைப்பதற்கு தமிழக மக்கள் மீது வரியை அதிகரித்து அடைப்பார்கள். போக்குவரத்து துறையில் 22 ஆயிரம் கடன் வைத்துக்கொண்டு திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்.
காஸ்ட்லியான முதல்வர் நமக்கு தேவையா
இதில், ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இருக்கும் தலைமைச் செயலகத்தில், சட்டமன்றத்தில் கூட்டம் நடத்தினால் என்ன குறைந்து விடப் போகிறது. பல்வேறு முதல்வர்கள் பணிபுரிந்த அறை விஜய்க்கு பற்றவில்லை என்று கூறுகிறார். ஏனென்றால், இவர் காஸ்ட்லியான முதலமைச்சர் ஆவார். கடல் அழகை பார்த்துக்கொண்டே இருப்பதற்காக புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிட்டுள்ளார். குரங்கு கையில் தங்க மோதிரம் கிடைத்தது போல, விஜய் கையில் ஆட்சி கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?




தவெக ஆட்சியில் 1 லட்சம் கோடி லஞ்ச பணம் பறிமுதல்
இந்த நிலையில், முதல்வர் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிக்கப்பட்டதாக கூறும் நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு லட்சம் கோடி லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் மேட்டூர் அணையை திறப்பதற்காக தனி விமானத்தில் முதல்வர் விஜய் சென்றதற்கு ரூ. 40 லட்சம் செலவானது. அவர் சென்னையில் இருந்து சேலம் சென்று திரும்பிய அதற்கு மட்டும் ரூ. 4.5 கோடி செலவாகி உள்ளது.
ரூ.4 கோடியில் கட்டப்பட்ட அணை தண்ணீரை திறக்க ரூ. 4.5 கோடி செலவு
ஆங்கிலேயர்கள் காலத்தில் மேட்டூர் அணை ரூ. 4 கோடியில் கட்டப்பட்டது. அந்த அணையின் தண்ணீரை திறப்பதற்கு ரூ. 4.5 கோடி செலவு செய்த முதல்வர் நாட்டு மக்களுக்கு தேவையா. கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெகவினரை தவிர பிற கட்சியினர் மட்டுமே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அவரது கட்சி கூட்டத்திற்கு வந்தவர்களுக்கே உதவி செய்யாத அவர், நாட்டு மக்களை கவனித்துக் கொள்வாரா என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: தனியார் மயத்தை கைவிடுக.. மின்துறையில் உடனடியாக இதை செய்க.. தவெக அரசுக்கு சண்முகம் வலியுறுத்தல்!