AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கி வேலைநிறுத்தம்: 3 நாட்களுக்கு ஏடிஎம் கட்டணம் ரத்து – எஸ்பிஐ அறிவிப்பு

SBI Waives ATM Transaction Charges : நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், செப்டம்பர் 28, முதல் செப்டம்பர் 30 வரை மூன்று நாட்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி வேலைநிறுத்தம்: 3 நாட்களுக்கு ஏடிஎம் கட்டணம் ரத்து – எஸ்பிஐ அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Sep 2026 18:38 PM IST

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி தரும் அறிவிப்பை ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் படி செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான மூன்று நாட்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

3 நாட்களுக்கு ஏடிஎம் கட்டணம் ரத்து

இந்தச் சலுகை ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் இந்த 3 நாட்களில் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதுகுறித்த தகவலை எஸ்பிஐ தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தின் போது வங்கிச் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், ஏடிஎம், YONO, ஆன்லைன் வங்கி, மொபைல் வங்கி,வாட்ஸ்அப் மற்றும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்றும் ஸ்டேட் பேங்க் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி ஊழியர் சங்க மன்றம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. வங்கித் துறையில் பணிபுரிபவர்களில் 90 சதவிகிதம் பேர் தங்கள் அமைப்பில் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வங்கி வேலை நாள் என்பதுதான் இவர்களின் முக்கியக் கோரிக்கை. இதுதவிர வேறு சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு

 

வேலைநிறுத்த நாட்களில் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்குச் செல்லாமலேயே பல பணிகளை முடித்துக்கொள்ளலாம். யுபிஐ போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணப் பரிமாற்றம், கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை வீட்டிலிருந்தே செய்யலாம். மொபைல் வங்கி, இணைய வங்கி, வாட்ஸ்அப் வங்கி சேவைகளும் கிடைக்கும். எனினும், சில குறிப்பிட்ட சேவைகள் வங்கியின் செயல்பாட்டு ஏற்பாடுகளைப் பொறுத்து மாறுபடலாம்.

இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!

வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, அனைத்து பொதுத்துறை வங்கிகளும் செப்டம்பர் 27, 2026 ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் ஞாயிறன்று பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று விடுமுறையும் இரட்டிப்பு ஊதியமும் வழங்க வேண்டும் என்று ஊழியர் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். இதற்கிடையில் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது என்பதால் இந்த வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us