கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா? உண்மை என்ன?
Gold Loan Rule : அவசர தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்குவது என்பது நம் ஊர்களில் வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த நிலையில் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்டால் உடனே நகை திருப்பி வழங்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அவசர தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்குவது என்பது நம் ஊர்களில் வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த நிலையில் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்டால் நகை உடனே கைக்கு வந்துவிடும் என்றுதான் பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் உங்கள் பெயரில் நிலுவையில் உள்ள வேறு கடன்களைப் பொறுத்து, நகையைத் திருப்பித் தராமல் வைத்திருக்கும் உரிமை வங்கிக்கு இருக்கலாம்.
கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா?
இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 பிரிவு 171ன் படி, வங்கிகளுக்கு இந்த உரிமையை வழங்குகிறது. தனியாக வேறு ஒப்பந்தம் எதுவும் இல்லாதபட்சத்தில், தங்களிடம் உள்ள பிணையப் பொருட்களை வங்கிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். இதைத்தான் பொது உரிமை என அழைக்கப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!




இது தொடர்பாக சமீபத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு இந்த விவகாரத்தை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்தது. ஒருவர் தனது நகைக் கடனை முழுமையாக அடைத்துவிட்டார். ஆனால் அவர் மீது வேறொரு கடன் இருந்ததால், வங்கி நகையைத் திருப்பித் தர மறுத்தது. அவர் மீது வீட்டுக் கடன் ஒன்று இருந்துள்ளது.
மேலும், நகைக் கடன் அடமானப் படிவத்தில், தனியாகவோ கூட்டாகவோ வாங்கிய முந்தைய மற்றும் எதிர்காலக் கடன்களுக்கும் இந்த நகையைப் பிணையாகக் கருதலாம் என்ற நிபந்தனை இடம் பெற்றிருந்தது. அதற்கு அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருந்தார். இதன் அடிப்படையில் வங்கியின் நடவடிக்கை சரியானது தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு தொடர்பான விசாரணை கடந்த ஆகஸ்ட் 31, 2026 அன்று விசாரணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, வீட்டுக் கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பிறகு 4 வேலை நாட்களுக்குள் நகையை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
இதனையடுத்து நகைக் கடன் பெறும் அதற்கான ஒப்பந்தத்தை தெளிவாக படிப்பது நல்லது. ஒரு நகைக் கடனை அடைத்துவிட்டால் மட்டும், நகை உடனடியாக திரும்பி வழங்கப்படாது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அமித்ராஜ் கௌஷல் மணி கண்ட்ரோல் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துப்படி, ஒருவர் நகைக்கடன் வாங்கும்போது, அவர் மீது மற்ற கடன்கள் நிலுவையில் உள்ளதா? தற்போதைய அல்லது எதிர்காலக் கடன்களுக்கும் நகையைப் பிணையாகப் பயன்படுத்த அவர் ஒப்புக்கொண்டாரா? என்பது குறித்து தெரிந்துகொள்வது அவசியம்