AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!

Tips For Financial Planning | பொருளாதார பாதுகாப்பை பெற சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இந்த நிலையில், இதுவரை பரவலாக பயன்படுத்தி வந்த 50:30:20 ஃபார்முலாவை விட தற்போதுள்ள புதிய சேமிப்பு மற்றும் முதலீட்டு ஃபார்முலா குறித்து பார்க்கலாம்.

சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Sep 2026 19:40 PM IST

மனிதர்கள் தங்களது பொருளாதாரத்தை பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க வேண்டும் என்றால் கட்டாயம் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும். மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். ஆனால், எப்படி முதலீடு செய்ய வேண்டும், பணத்தை செலவு செய்ய வேண்டும் என தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்பர். அத்தகையவர்களுக்கு தான் சில சேமிப்பு ஃபார்முலாக்கள் (Saving Formulas) உள்ளன. அதன் மூலம் சேமிப்பு அல்லது முதலீடு செய்வது நிதி இலக்கை சுலபமாக அடைய உதவியாக இருக்கும்.

சேமிப்பு ஃபார்முலாக்கள்

அத்தகைய சேமிப்பு ஃபார்முலாக்களில் ஒன்றுதான் 50:30:20. இது ஒரு சிறந்த சேமிப்பு ஃபார்முலாவாக இருந்தாலும், தற்போதைய வாழ்க்கை முறைக்கு இது உதவி செய்யாது என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சேமிப்பு தொடர்பான புதிய விதி ஒன்று பிரபலமாகி வருகிறது. அது என்ன விதி, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?

பிரபலமாகும் புதிய சேமிப்பு ஃபார்முலா

பெரும்பாலான நபர்களால் பின்பற்றப்பட்டு வந்த 50:30:20 ஃபார்முலா படி ஒருவர் தனது மாத வருமானத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அதில் முதலில் உள்ள 50-ஐ, 50 சதவீதம் என கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது, மாத வருமானத்தில் இருந்து 50 சதவீத பணத்தை வாடகை, மளிகை பொருட்கள், மின்சாரம், தண்ணீர், இன்சூரன்ஸ் மற்றும் கடன்களுக்கான மாத தவணை ஆகியவற்றுக்காக பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 30 சதவீத பணத்தை பொழுதுபோக்கு மற்றும் இதர செலவுகளுக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள 20 சதவீத பணத்தை முதலீடு மற்றும் அவசரகால நிதிக்காக ஒதுக்கி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : பிஎஃப் விதிகள்: வீடு கட்ட, கடன் செலுத்த பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?

முன்பு போல தற்போதைய சூழல் இல்லை. விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக செல்வுகள் அதிகரித்துள்ளன. தற்போதைய சூழலில் 50 சதவீத பணத்தை மட்டுமே வீட்டுக்கு பயன்படுத்த முடியாது. எனவே தான், பொருளாதார நிபுணர்கள் தேவை மற்றும் விருப்பம் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ள கூறிகின்றனர். அதாவது, தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறிய சிறிய விருப்பங்களஒ விட்டுக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க முடியும் என்று கூறுகின்றனர்.

Follow Us