20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?
What Is The Reason Behind Diamond Price Crash | வைரம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வைரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் வைரத்தின் ஆதிக்கம் சந்தையில் அதிகமாக உள்ள நிலையில், வைரம் இத்தைய சரிவை சந்தித்துள்ளது.
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளவை தான் தங்கம் (Gold), வெள்ளி (Silver) மற்றும் வைரம் (Diamond). இதில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் நபர்கள், எதிர்காலத்தில் நிதி தேவை ஏற்பட்டால் அடமானம் வைத்து நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலும் முதலீடு செய்வர். ஆனால், வைரம் அப்படி அல்ல. காரணம், வைரத்தை கடைகளிலோ அல்லது வங்கியிலோ அடகு வைத்து பணம் பெற முடியும். ஆனால், வைரத்தை நகை கடைகளில் விற்பனை செய்துக்கொள்ள முடியும்.
ஆனால், தங்கத்தை போல் இல்லாமல், வாங்கியதை விடவும் குறைவான விலைக்கு தான் வைரம் எடுத்துக்கொள்ளப்படும். எனவே அதிக லாபம் பெறும்போதுதான் வைரத்தை விற்பனை செய்ய வேண்டும். இதன் காரணமாக தான் பலரும் வைரத்தில் முதலீடு செய்யாமல் இருப்பர். இந்த நிலையில் தான், வைரம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : டிசம்பருக்குள் RBI, 2 முறை ரெப்போ வட்டியை உயர்த்த வாய்ப்பு.. வெளியாக முக்கிய தகவல்!
20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை சந்தித்த வைரம்
வைரத்தின் மதிப்பு காலம் காலமாக அதன் இருப்பு மற்றும் தேவையை மையப்படுத்தியதாக தான் இருந்து வருகிறது. இந்த சூழலில் செயற்கை வைரத்தின் வருகையால், இயற்கை வைரத்தின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விடவும், தற்போது வைரத்தின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : வெள்ளைக்குதிரை.. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 புதிய மாடல்.. புதிய அம்சங்கள் என்னென்ன?
80 சதவீதம் விலை குறைவாக விற்பனையாகும் வைரம்
பொதுவாக வர்த்தக சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படும் 1 கேரட் இயற்கையான வட்ட வடிவ வைரத்தின் விலை 3530 முதல் 3860 அமெரிக்க டாலர்களாக உள்ளது. வைரம் இத்தகைய மோசமான சரிவை சந்தித்துள்ளதற்கு, ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் வைரங்கள் தான் முக்கிய காரணமாக உள்ளன. அதுமட்டுமன்றி, இந்த செயற்கை வைரங்கள் இயற்கை வைரத்தை விட 80 சதவீதத்திற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுவதன் காரணமாக பெரும்பாலானவர்கள் அதனையே தேர்வு செய்கின்றனர். இதுவும் வைரத்தின் விலை சரிய முக்கிய காரணமாக உள்ளது.



