AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செப் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. இந்த மாத சம்பளம் தாமதம் ஆகுமா?

Bank Strike For 3 Days | செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

செப் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. இந்த மாத சம்பளம் தாமதம் ஆகுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Sep 2026 12:51 PM IST

இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30,2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், மாத கடைசியில் வங்கி சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, சம்பளம் வரும் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால் உரிய நேரத்திற்கு சம்பளம் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், வங்கி ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாத கடைசியில் மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (United Forum Of Bank Unions) அமைப்பின் அறிவிப்பின்படி, செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த மூன்று நாட்கள் போராட்டம் சரியாக திங்கள் கிழமை தொடன்குகிறது. அதாவது அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை வரும். இந்த நிலையில் செப்டம்பர் 26, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 என மொத்தம் 5 நாட்கள் வங்கிகளின் சேவைகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Gold : கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?.. தற்போதைய நிலவரம் என்ன?

சம்பளம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுமா?

பெரும்பாலான வங்கிகள் மாத கடைசியில் சம்பளத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துவிடும். அந்த வகையில், அக்டோபர் 01, 2026 அன்று அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், வழக்கமாக வங்கிகள் முந்தைய மாதம் 30 ஆம் தேதியே வரவு வைக்க முடியாமல் போகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக மாத கடைசியில் சம்பளத்தை வாங்கும் நபர்களால், அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை உரிய நேரத்தில் பெற முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : கிரெடிட் கார்டில் 30% விதி என்றால் என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

முன்னதாக வேலை நிறுத்த போராட்டத்தை தவிர்க்கும் முயற்சியாக தலைமை தொழிலாளர் ஆணையர் வங்கி சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இருப்பினும் வங்கிகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தில் உறுதியாக உள்ளனர். இன்று நடைபெறும் கூட்டத்திற்கு பிறகே இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us