வீட்டுக் கடன் Vs சொத்துக் கடன்.. இரண்டில் எது சிறந்தது?..உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்!
Home Loan Vs Property Loan | வங்கிகள் பல வகையான கடன்களை வழங்கி வருகின்றன. அவற்றில் சொத்துக் கடன், வீட்டுக் கடன் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு கடன்களில் யாருக்கு எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
மனிதர்களுக்கு எப்போதுமே பணத் தேவை இருந்துக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக தான், ஒவ்வொருவரும் தங்களுக்கான பொருளாதார பாதுகாப்பை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. பலரும் தங்களிடம் பணம் இருக்கும்போது சொத்துக்களை வாங்கி வைத்து விடுவர். இதன் காரணமாக பலரும் வீட்டுக் கடன் (Home Loan) அல்லது சொத்து கடன் (Property Loan) வாங்குகின்றனர். இந்த நிலையில், இவை இரண்டில் யாருக்கு எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீட்டுக் கடன் Vs சொத்து கடன் – இரண்டில் எது சிறந்தது?
வீட்டுக் கடன் ஒருவர் சொத்து வாங்கவோ அல்லது வீடு கட்டவோ பெறப்படும் கடன் ஆகும். இந்தியாவில் பெரும்பாலான நபர்கள் தங்களது சொந்த வீடு கடனை இந்த வீட்டுக் கடன் மூலம் தான் பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். இதுவே சொத்து கடன் என்றால், தங்களிடம் இருக்கும் சொத்தை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் பெறுவது ஆகும். இவை இரண்டில் எந்த கடனை பெறுவது என்பது உங்களின் தேவையை பொருத்தது ஆகும்.
இதையும் படிங்க : ரயில்களில் இலவச தண்ணீர் பாட்டில் கிடைக்குமா? உண்மை என்ன?




வீட்டுக் கடன் – கவனிக்க வேண்டிய விஷயங்கள்
சொந்தமாக நிலம் வைத்துள்ளவர்கள் வீடு கட்ட வங்கிகள் மூலம் கடன் பெற்று தங்களது ஆசையை பூர்த்தி செய்துக்கொள்ள உதவும் அம்சமாக வீட்டுக் கடன் உள்ளது. வீடு கட்டுவதற்கு வங்கிகள் வழங்கும் பிரத்யேக கடனாக இது உள்ளது. நல்ல சிபிள் ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு வருமானம் ஆகியவை இருந்தால் போதும். வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்கும்.
இதையும் படிங்க : வீடு காலி செய்யும்போது முழு டெபாசிட் பணமும் வேண்டுமா?.. அப்போ இத பண்ணுங்க!
சொத்துக் கடன் – கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இதுவே சொத்துக் கடன் என்றால் வங்கியின் சொத்து மதிப்பீடு, லோன் டு வேல்யூ ரேஷியோ ஆகிய இரண்டையும் வைத்து அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படும். உதாரணமாக ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்கு ரூ.1 கோடி கடன் கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. இது வங்கியின் கணகீட்டின்படி வழங்கப்படும்.
இரண்டில் எது சிறந்தது?
நிலம் வாங்க அல்லது வீடு கட்ட வேண்டும் என நினைத்தால் நீங்கள் வீட்டுக் கடனை பெறலாம். இதுவே, நீங்கள் ஒரு தொழிலை தொடங்க உள்ளீர்கள் என்றால் அதற்கான முதலீடாக உங்களது சொத்து கடனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.