AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீடு காலி செய்யும்போது முழு டெபாசிட் பணமும் வேண்டுமா?.. அப்போ இத பண்ணுங்க!

Tips To Get Full Deposit Amount From House Owner | வீடு வாடகைக்கு போகும்போது கொடுக்கும் மொத்த அட்வான்ஸ் பணமும், வீட்டை காலி செய்யும்போது திரும்ப கிடைப்பதில்லை. இந்த நிலையில், வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து முழு அட்வான்ஸ் பணத்தையும் வாங்குவது எப்படி என பார்க்கலாம்.

வீடு காலி செய்யும்போது முழு டெபாசிட் பணமும் வேண்டுமா?.. அப்போ இத பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 18 Sep 2026 18:02 PM IST

வேலைவாய்ப்பு, கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களில் உள்ள வளர்ந்த நகரங்களை நோக்கி மக்கள் அதிக அளவு படையெடுக்கின்றனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு, வாடகை வீட்டில் வசிக்க வேண்டும் என்றால் மாதம் மாதம் முறையாக வாடகை செலுத்தினால் மட்டும் போதாது. வீட்டிற்குள் குடியேறுவதற்கு முன்னதாக குறைந்தது மூன்று மாதங்களுக்கான வாடகையையாவது முன் பணமாக கொடுக்க வேண்டும்.

இந்த பணத்தை வீட்டை காலி செய்யும்போது வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அதில் தான் ஒரு சிக்கல் உள்ளது. காரணம், வாடகை வீட்டை காலி செய்யும்போது பல்வேறு காரணங்களை கூறி வீட்டின் உரிமையாளர்கள் பணத்தை பிடித்தம் செய்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், அட்வான்ஸ் பணத்தை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் MDR கட்டணம்.. வணிகர்கள் கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன?

அட்வான்ஸ் பணத்தை முழுவதுமாக திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் ஒரு வீட்டிற்கு குடி ஏறுவதற்கு முன்னதாக சில விஷயங்கள் குறித்த தெளிவு பெற வேண்டும் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. அதாவது, உங்களது வாடகை ஒப்பந்தத்தில் இந்த மூன்று விஷயங்கள் உள்ளனவா என்பது குறித்து உறுதி செய்த பிறகு, ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்.

டெபாசிட் தொகை

நீங்கள் போடும் கடன் ஒப்பந்தத்தில் வீட்டின் உரிமையாளர் நீங்கள் கொடுக்கும் டெபாசிட் பணத்தை அப்படியே பதிவிட்டுள்ளாரா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ரூ.1 லட்சம் டெபாசிட் கொடுத்தால், உங்கள் ஒப்பந்தத்தில் அது குறிப்பிடப்பட வேண்டும்.

இதையும் படிங்க : வீட்டுக் கடனில் இந்த சிறிய மாற்றத்தை செய்தால் போதும்.. பெரிய லாபம் பார்க்கலாம்!

எதற்காக பணம் கழிக்கப்படும்?

ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே எந்த எந்த காரணங்களுக்காக பணம் கழிக்கப்படும் என்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் வீடு காலி செய்யும்போது தேவையில்லாமல் அதிக பணத்தை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படாது.

செக்யூரிட்டி டெபாசிட்

மும்பை, பூனே, பெங்களூரு ஆகிய பகுதிகளை சேர்ந்த உரிமையாளர்கள் செக்யூரிட்டி டெபாசிட் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். அதாவது அந்த தொகை மட்டுமே திருப்பி வழங்கும் வகையில் அவர்கள் ஒப்பந்தம் போடுகின்றனர். எனவே அது குறித்தும் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.

Follow Us