AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs BAN W: செமி பைனலில் வங்கதேசத்துடன் மோதல்.. போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?

2026 Asian Games Semi Final: இந்தியா - வங்கதேசத்தை அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு நிஷின் (கோரோகி விளையாட்டு பார்க்) மைதானத்தில் தொடங்கும். எனவே, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

IND W vs BAN W: செமி பைனலில் வங்கதேசத்துடன் மோதல்.. போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?
இந்திய மகளிர் Vs வங்கதேச மகளிர்Image Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Sep 2026 17:36 PM IST

காலிறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தியதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Indian Womens Cricket Team) ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் (Asian Games 2026) அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று அதாவது 2026 செப்டம்பர் 18ம் தேதி நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை, மலேசியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் நான்கு இடங்களில் தங்களது இடங்களை உறுதி செய்தன. அரையிறுதியில் ஹர்மன்பிரீத் கவுரும் அவரது அணியும் யாரை எதிர்கொள்ளப் போகிறார்கள், இந்தப் போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐசிசி டி20 தரவரிசையில் ஒரே ஜம்ப்.. தீப்தி சர்மா கலக்கல்..!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதிக்கு வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன. காலிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சைத் தீர்மானித்தார். அபாயகரமான ஸ்ரீ சரணி ஜப்பான் அணியை 57 ரன்களுக்குள் சுருட்டினார். இலக்கை விரட்டிய இந்தியா, 5வது ஓவரில் வெற்றி பெற்றது. இதுமட்டுமின்றி, ஷெஃபாலி வர்மா 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதியில் இந்தியா யாரை எதிர்கொள்ளும்?


2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதியில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொள்ளும். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையிலும், அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனாவுக்கு எதிரான வங்கதேசத்தின் காலிறுதிப் போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. விதிகளின்படி, தரவரிசையில் உயர்ந்த இடத்தில் உள்ள அணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், சீனா வெளியேற்றப்பட்டது. மேலும், வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 அரையிறுதிப் போட்டி விவரங்கள்
இரு அரையிறுதிப் போட்டிகளும் வருகின்ற 2026 செப்டம்பர் 20ம் தேதி நடைபெறும். முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கையை எதிர்கொள்ளும். இரண்டாவது போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொள்ளும்.

ALSO READ: சரணடைந்த ஜப்பான்.. அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்திய மகளிர்!

இந்தியா – வங்கதேசத்தை அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு நிஷின் (கோரோகி விளையாட்டுப் பூங்கா) மைதானத்தில் தொடங்கும். எனவே, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இருப்பினும், சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை பாகிஸ்தானைத் தோற்கடித்ததையும், அதில் இந்தியா அவர்களை வீழ்த்தி பட்டத்தை வென்றதையும் நினைவுகூர வேண்டும்.

Follow Us