Womens Asia Cup 2026: நாங்கள் சாம்பியன்கள், அதுவே போதுமானது.. கோப்பை வாங்காதது குறித்து கோச் விளக்கம்!
Amol Muzumdar Statement: கடந்த 2025 செப்டம்பர் மாதம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றபோது, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் சீர்குலைந்திருந்ததால், நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க இந்திய அணி மறுத்துவிட்டது. அப்போது, நக்வியின் வற்புறுத்தலால், கோப்பை வழங்கும் விழா முழுமையடையாமல் நின்றுபோனதுடன், கோப்பையும் ஏசிசி அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது.
2026 மகளிர் ஆசியக் கோப்பை (2026 Womens Asia Cup) இறுதிப் போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, எட்டாவது முறையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. இருப்பினும், வெற்றிக்கு பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) ஆகியோரிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய மகளிர் அணி மறுத்தது. இதனால், ஏசிசி கோப்பையை எடுத்து சென்றது. தற்போது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார், இந்த முழுப் பிரச்சினை மற்றும் கோப்பைப் புறக்கணிப்பு குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ALSO READ: கோப்பையை மறுத்தாலும் கொட்டும் பணமழை.. இந்திய மகளிர் அணி பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெளிவுபடுத்தியதாவது, “விருது வழங்கும் விழாவில் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க மறுத்த முடிவு பிசிசிஐ-யினுடையது. அந்த முடிவுக்கு எங்கள் இந்திய மகளிர் அணி முழுமையாக ஆதரவளிக்கிறது. இந்தச் சம்பவம் இந்திய அணியின் இந்த மகத்தான சாதனையின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடாது. மேலும், எங்கள் முடிவைப் பற்றி அணிக்கு எந்த வருத்தமும் இல்லை. இது பிசிசிஐ எடுத்துள்ள நிலைப்பாடு, நாங்கள் அதை முழுமையாக ஆதரிக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, இந்தத் தொடர் இப்போது முடிந்துவிட்டது. நாங்கள் சாம்பியன்கள், அதுவே எங்களுக்குப் போதுமானது. இந்தத் தொடர் அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டது. எனது அணி, வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இப்போது எங்கள் கவனம் அடுத்ததாக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மீது உள்ளது.” என்று தெரிவித்தார்.




இந்திய ஆண்கள் அணியும் இதையே செய்தது..
கடந்த 2025 செப்டம்பர் மாதம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றபோது, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் சீர்குலைந்திருந்ததால், நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க இந்திய அணி மறுத்துவிட்டது. அப்போது, நக்வியின் வற்புறுத்தலால், கோப்பை வழங்கும் விழா முழுமையடையாமல் நின்றுபோனதுடன், கோப்பையும் ஏசிசி அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது. தற்போது, 2026 மகளிர் ஆசியக் கோப்பைக்கும் இதே வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது.
ALSO READ: கோப்பையே வேண்டாம்.. மொஹ்சின் நக்வியை நிராகரித்த இந்திய மகளிர்.. மைதானத்தில் மீண்டும் பரபர!
சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்திய மகளிர் அணி அமைதியாக ஓய்வறைக்குத் திரும்பியது. ஆனால், இந்திய ஆடவர் அணி கோப்பையைப் பெறாததால் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. ஆசியக் கோப்பை இல்லாமல் இந்திய வீரர்கள் மேடையில் கொண்டாடியது மறுநாள் விவாதப் பொருளாக மாறியது. அதே நேரத்தில், இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களது சாம்பியன் பட்டத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.