ஒருவர் எந்த வயதில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?.. நடைமுறைக்கு சாத்தியமா?
Salary Calculation Based On Age | மாத சம்பளம் வாங்கும் நபர் தொடர்ந்து சம்பள உயர்வை பெற்றால் மட்டுமே, அவர் தனது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், ஒருவர் தனது வயதுக்கு ஏற்ப எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒருவரின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக வருமானம் உள்ளது. ஒருவர் எவ்வளவு வருமானம் பெறுகிறாரோ அதற்கு ஏற்ப தான் அவரது வாழ்க்கை சூழல் இருக்கும். அதேபோல, ஒருவரின் பணியை பொறுத்தும் அவருக்கான ஊதியம் மாறுபடும். நாம் சமூக ஊடகங்களில் பார்க்கும்போது சிலர் 20 வயது, 22 வயதில் லட்சங்களில் வருமானம் ஈட்டுவதாக கூறுவர். அதனை பார்க்கும்போது, நாம் மட்டும்தான் குறைவாக வருமானம் ஈட்டுகிறோம் என்ற கவலை பலருக்கும் இருக்கும். ஆனால், அது உண்மை அல்ல. உண்மையில், இந்தியாவில் வருமான கணக்கு சற்று குறைவாகவே உள்ளது.
எந்த வயதில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?
அரசாங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் சராசரி வருமானம் மிக குறைந்த அளவாகவே உள்ளது. அதன்படி, 21 வயதில் பலரும் உயர்கல்வி படித்துக்கொண்டும், வேலை தேடிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இத்தகைய ஆரம்பக்கட்டத்தில் மிக பிரம்மாண்டமான மாத சம்பளம் கிடைக்கும் என நினைப்பது மிகவும் தவறானதாகும். காரணம், தற்போதைய சூழலில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதே மிகவும் சவாலானதாக உள்ளது.
இதையும் படிங்க : உங்கள் கனவுகளை நனவாக்கும் ஃப்ரீடம் ஃபண்ட்.. அப்படி என்றால் என்ன.. முழு விவரம் இதோ!




20 முதல் 25 வயது வரை எவ்வளவு சம்பளம் சிறந்தது?
20 வயதில் பலரும் படிப்பை முடித்திருக்க மாட்டார்கள். ஒருவர் தனது 21 வயதில் தான் வேலை செய்ய தொடங்குவார். இந்த நிலையில், 21 வயதில் ஒருவர் ரூ.30,000 வருமானம் பெறுவது நல்ல தொடாக்கமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் நல்ல திறன்களை வளர்த்துக்கொள்வது, வேலையில் நல்ல வளர்ச்சியை பெற உதவும். எனவே அந்த வயதில் பணத்தை குறித்து கவலைக்கொள்ளாமல் வேலை செய்ய வேண்டும்.
25 வயது முதல் 30 வயது வரை எவ்வளவு சம்பளம் சிறந்தது?
இதுவே 25 முதல் 30 வயது வரை உள்ள நபர் சற்று கூடுதலாக வருமானம் ஈட்ட வேண்டும். காரணம், அவருக்கு ஏற்கனவே நான்கு ஆண்டுகள் அனுபவம் இருக்கும். இந்த நிலையில், அதில் இருந்து கூடுதல் வருமானம் பெறும் பட்சத்தில் ரூ.60,000 மாத ஊதிய பெறுவது பாதுகாப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க : இனி காய்கறி வாங்குவதை கூட ஏஐ பார்த்துக்கொள்ளும்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்.. NPCI புதிய நடவடிக்கை!
30 வயதில் எவ்வளவு வருமானம் ஈட்ட வேண்டும்?
30 வயதில் ஒருவர் திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்திருப்பார். இதன் காரணமாக அவருக்கு செலவும் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில், 30 வயதுக்கு மேல் இருக்கும் நபர் ரூ.1,00,000 லட்சம் வருமானம் ஈட்டுவது பாதுகாப்பானதாக இருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் ஒருவர் நிலையான பொருளாதாரத்தை பெற எவ்வளவு வருமானம் ஈட்ட வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக உள்ளது. ஆனால், யதார்த்தமான சூழல் அப்படி இல்லை. பலரும் இந்த அளவுக்கும் குறைவாக தான் வருமானம் ஈட்டுகின்றனர்.