AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MIS திட்டம்.. முதலீடு செய்பவர் இறந்தால் யாருக்கு பணம் செல்லும்?.. விதிகள் கூறுவது என்ன?

Monthly Income Scheme Important Rules | மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். இந்த நிலையில், மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்த நபர் உயிரிழந்துவிட்டால் பணம் யாருக்கு சென்று சேறும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

MIS திட்டம்.. முதலீடு செய்பவர் இறந்தால் யாருக்கு பணம் செல்லும்?.. விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Sep 2026 17:03 PM IST

பொதுமக்கள் சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) செய்ய அரசு பல வகையான திட்டங்களை அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Income Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்து, மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறலாம். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னதாக அவற்றின் விதிகள் குறித்து தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த நிலையில், எம்ஐஎஸ் திட்டத்தில் முதலீடு செய்தவர் திடீரென இறந்துவிட்டால் அந்த பணம் என்னவாகும், அவருக்கு அடுத்தபடியாக அந்த பணம் யாருக்கு சென்று சேரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் என்றால் என்ன?

இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். அரசு அஞ்சலங்கள் மூலம் வழங்கும் சிறு சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. இது ஒரு மொத்த முதலீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்து, அதன் பலன்களை மாதம் மாதம் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் தனிநபர் ரூ.9 லட்சம் வரையும், கூட்டாக சேர்ந்து ரூ.15 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம். அதாவது, கணவன் – மனைவி இணைந்தும் இதில் முதலீடு செய்யலாம்.

இதையும் படிங்க : பண்டிகை நாட்களில் ரயில் டிக்கெட்டை உறுதிபடுத்துவது எப்படி? அப்போ இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க

முதலீட்டாளர் இறந்துவிட்டால் பணம் யாருக்கும் செல்லும்?

இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீட்டாளர்கள் உயிரிழந்துவிட்டால், அவருடைய நாமினி அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  1. பூர்த்தி செய்யப்பட்ட படிவம்
  2. இறப்புச் சான்றிதழ்
  3. பாஸ்புக்
  4. ஆதார் விபரங்கள்
  5. கேஒய்சி ஆவணங்கள்

இதையும் படிங்க : வேலை, வருமானம் குறித்து கவலையா? EPFO-ன் இந்த 5 முக்கிய நன்மைகள்

மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பணத்திற்கு ஒரு நாமினி இருந்தால் எந்தவித சிக்கலும் இல்லாமல் பணம் மொத்தமாக வழங்கப்படும். இதுவே, இரண்டு அல்லது மூன்று நாமினிகள் இருந்தால் பணம் பிரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us