AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்றே கடைசி.. நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை.. ஏடிஎம்-லும் பணம் கிடைக்காதா?

4 Days Continuous Bank Holidays In Tamil Nadu | தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் நாளை (செப்டம்பர் 11, 2026) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், நாளை முதல் செப்டம்பர் 14, 2026 வரை என மொத்தம் 4 நாட்கள் வங்கிகள் செய்லபடாது.

இன்றே கடைசி.. நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை.. ஏடிஎம்-லும் பணம் கிடைக்காதா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Sep 2026 12:51 PM IST

தமிழகம் நாளை (செப்டம்பர் 11, 2026) தமிழகம் முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) ஏற்பட உள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகியுள்ள நிலையில், ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்களில் கூட காசு இல்லாத சூழல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஏற்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாளை தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டாக நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை இந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இத உடனே செக் பண்ணுங்க!

தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் வங்கிகள்

வங்கிகளின் இந்த போராட்டத்தின் எதிரொலியாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. அதாவது வேலை நிறுத்தம் நடைபெறும் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை. அதனை தொடர்ந்து செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் சனி மாற்றும் ஞாயிற்று கிழமைகள் என்பதால் அந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன் பிறகு, செப்டம்பர் 14, 2026 அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றைய தினம் அரசு பண்டிகையை என்பதால் வங்கிகள் செயல்படாது. எனவே, நாளை முதல் செப்டம்பர் 14, 2026 வரை என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.

இதையும் படிங்க : இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!

இந்த தொடர் விடுமுறைகள் காரணமாக சேவைகளை பெற பொதுமக்கள் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த 4 நாட்கள் தொடர்ச்சியாக ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பும் சூழலும் இல்லாததன் காரணமாக ஏடிஎம் மையங்களிலும் விரைவில் பணம் தீர்ந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது.

Follow Us