வேலை, வருமானம் குறித்து கவலையா? EPFO-ன் இந்த 5 முக்கிய நன்மைகள்
EPFO Benefits You Should Know : தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, வேலை இழப்பு அல்லது குறைவான சம்பளம், திடீர் செலவுகள் போன்ற சூழ்நிலைகள் திடீரென நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். இபிஎஃப்ஓ திட்டத்தின் மூலம் மூலம் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள், நீண்ட கால நிதி பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும்
தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, வேலை இழப்பு அல்லது குறைவான சம்பளம், திடீர் செலவுகள் போன்ற சூழ்நிலைகள் திடீரென நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஆனால், பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் மூலம் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள், நீண்ட கால நிதி பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக பணியாளர்களின் அவசர பண தேவைக்கு இது பெரிதும் கைகொடுக்கும். குறிப்பாக, யுஏஎன் வசதி, ஓய்வூதிய சேமிப்பு, வரிச் சலுகை. குறிப்பிட்ட தேவைகளுக்கான பணம் எடுக்கும் வசதி ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நன்மைகளாக உள்ளன.
1. ஓய்வூதிய சேமிப்பு
இபிஎஃப் விதிகளின்படி, பொதுவாக ஊழியரும் அவர் பணியாற்றும் நிறுவனமும் தலா அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை ஓய்வூதியத்துக்காக வழங்குகின்ரனர். உதாரணமாக, ஒருவரின் மாத அடிப்படை சம்பளம் 30,000 ரூபாய் என்றால், ஊழியர் மற்றும் நிறுவனத்தின் மொத்த மாத பங்களிப்பு கிட்டத்தட்ட ரூ.7,200 இருக்கும். மேலும் ரூ.30,000 என்ற சம்பளம் மாறாமல் ஊழியர் தொடர்ந்து 30 ஆண்டுகள் ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்தினால், மொத்தமாக 25.92 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இதனுடன் இபிஎஃப் வட்டி மற்றும் ஓய்வூதிய பலன்களும் கிடைக்கக்கூடும்.
இதையும் படிக்க : இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!




2.வரி சலுகை
இபிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் பணத்திற்கு வட்டி கிடைக்கிறது. குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு, இபிஎஃப்ல் கிடைக்கும் வட்டி வருமான வரியிலிருந்து விலக்கு பெறுகிறது. மேலும், பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்யும் வரி செலுத்துவோருக்கு, இபிஎஃப் உள்ளிட்ட குறிப்பிட்ட முதலீடுகளின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை பிரிவு 80C மூலம் வரிச் சலுகை பெறும் வாய்ப்பு உள்ளது.
3.ஓய்வூதியம்
ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் 12 சதவிகிதம் மட்டுமல்லாமல், நிறுவனமும் அதே அளவிலான பணத்தை செலுத்தும். நிறுவனம் சம்பளத்தில் 12 சதவிகிதம் செலுத்தும் நிலையில், விதிகளின்படி ஒரு பகுதி பென்சன் திட்டத்துக்கு செல்கிறது. மீதமுள்ள பகுதி இபிஎஃப் கணக்கில் சேர்க்கப்படுகிறது. அதாவது, ஊழியர் நேரடியாக சம்பளத்தில் பார்க்காத நிறுவனத்தின் பங்களிப்பும் அவரது எதிர்கால சேமிப்பில் சேர்ந்து கொண்டே இருக்கும்.
4.நிதிப் பாதுகாப்பு
இபிஎஃப்ஓ கணக்கில் சரியான முறையில் நாமினேஷன் செய்திருப்பது மிகவும் முக்கியம். கணக்கு வைத்திருப்பவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினர் அல்லது நாமினிக்கு நிதி பலன்களைப் பெறுவதற்கான நடைமுறை எளிதாகும். மேலும், Employees’ Deposit Linked Insurance Scheme மூலம் காப்பீட்டு பாதுகாப்பும், இபிஎஸ் மூலம் விதிகளுக்கு உட்பட்ட குடும்ப ஓய்வூதிய பலன்களும் கிடைக்கக்கூடும். மேலும், இபிஎஃப் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பாதுகாப்புகளும் உள்ளன. தனிப்பட்ட கடன்கள் அல்லது சில சட்டப் பொறுப்புகளுக்காக இபிஎஃப் சேமிப்பை நீதிமன்ற நடவடிக்கைகளில் பறிமுதல் செய்வதிலிருந்து பாதுகாக்கும் விதிகள் உள்ளன.
இதையும் படிக்க : HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இத உடனே செக் பண்ணுங்க!
5.அவசரத் தேவைகளுக்கு பணம் எடுக்கும் வசதி
இபிஎஃப் பணத்தை ஓய்வுக்காலத்திற்காக மட்டும் வைத்திருக்க வேண்டியதில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு, மருத்துவச் செலவுகள், வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், கல்வி, திருமணம் உள்ளிட்ட குறிப்பிட்ட தேவைகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கு பணம் எடுக்க முடியும். மேலும், ஓய்வு, நிரந்தர இயலாமை அல்லது குறிப்பிட்ட வேலைவாய்ப்பின்மை சூழ்நிலைகளில் முழுமையாக பணம் பெறுவதற்கான விதிகளும் உள்ளன.