AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: இந்திய அணியினருக்கு 5 ஸ்டார் ஹோட்டல் இல்லை.. ஸ்ரிட்டாக சொன்ன பிசிசிஐ!

Indian Cricket Team: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெறவுள்ள நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஏற்பாட்டாளர்கள் என்ன ஏற்பாடுகளைச் செய்தாலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Asian Games 2026: இந்திய அணியினருக்கு 5 ஸ்டார் ஹோட்டல் இல்லை.. ஸ்ரிட்டாக சொன்ன பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணிகள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Sep 2026 21:19 PM IST

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games 2026) வருகின்ற 2026 செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகின்றன. இதில், இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) பங்கேற்கிறது. இந்திய அணி ஒரு சுற்றுப்பயணம் அல்லது நிகழ்விற்காகப் பயணம் செய்யும்போது, ​​பொதுவாக 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்குமிட வசதி வழங்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெறவுள்ள நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஏற்பாட்டாளர்கள் என்ன ஏற்பாடுகளைச் செய்தாலும், இந்திய வீரர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ALSO READ: அக்டோபர் 3ம் தேதி இவ்வளவு ஷ்பெஷலா? ஒரே நாளில் 2 போட்டியில் விளையாடும் இந்திய அணி!

5 நட்சத்திர ஹோட்டல் கிடைக்காது..

இந்தியக் குழுவினருக்கான வழியனுப்பு விழாவில் பேசிய ராஜீவ் சுக்லா, “ஏற்பாட்டாளர்கள் வழங்கும் இடங்களில் வீரர்கள் தங்குவார்கள். இந்திய வீரர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாத வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவை நிச்சயமாக 5-நட்சத்திர ஹோட்டல்கள் அல்ல, ஆனாலும் அவர்கள் தங்குவதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எங்கள் வீரர்களுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகளின் புகைப்படங்களும் காணொளிகளும் எங்களிடம் உள்ளன. அது ஒரு நல்ல இடம் என்று நான் நினைக்கிறேன். எங்கள் வீரர்கள் அங்கேதான் தங்க வேண்டும், இல்லையென்றால் நகோயாவிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள ஒசாகா அல்லது டோக்கியோவில் அவர்களுக்குத் தங்குமிடம் அளிக்கப்பட வேண்டியிருக்கும். இந்திய வீரர்களுக்குத் தனித்தனி அறைகள் வழங்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து கிரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் கிரிக்கெட் அட்டவணை:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி 2026 செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். ஆடவர் அணி வருகின்ற 2026 செப்டம்பர் 24ம் தேதி முதல் வருகின்ற 2026 அக்டோபர் 3ஆம் தேதி வரை விளையாடும். இந்திய மகளிர் அணி தனது காலிறுதிப் போட்டியில் வருகின்ற 2026 செப்டம்பர் 18ம் தேதி ஜப்பானை எதிர்கொள்ளும். இந்திய ஆடவர் அணி தனது முதல் போட்டியில் வருகின்ற 2026 செப்டம்பர் 28ம் தேதி விளையாடும்.

ALSO READ: இந்தியா – ஜப்பான் போட்டி! ஒளிபரப்பாளர் இல்லாததால் பிரச்சனை.. தூண்டில் போடும் பிசிசிஐ!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முன்னதாக ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, ​​டிரெஸ்ஸிங் ரூம், ஆடுகளம் மற்றும் மைதானம் குறித்து ஏசிசி அதிகாரிகளுக்கு கவலையை கொடுத்தது. ஏற்பாட்டாளர்கள் மேம்பாடுகளைச் செய்ததால், தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அனைத்து ஏற்பாடுகளிலும் திருப்தி அடைந்துள்ளது.

Follow Us