Big Bash League: தனியார்மயமாகும் பிக் பாஷ் லீக்.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புதல்!
Cricket Australia: மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் இயக்கப்படுகிறது. மற்ற கிளப்புகளையும் விற்பனைக்கு வைப்பது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா பரிசீலிக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகியவை தனியார் முதலீட்டில் ஆர்வம் காட்டும் மற்ற கிளப் அணிகளாகும்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) நேற்று அதாவது 2026 செப்டம்பர் 8ம் தேதி பிக் பாஷ் லீக்கில் (BBL) தனியார் முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது,பிக் பாஷ் லீக்கில் டி20 லீக் அணியான மெல்போர்ன் ரெனேகேட்ஸை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்தப் புதிய திட்டத்தில் முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக அந்நாட்டின் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியின் 100 சதவீதப் பங்குகளை வாங்குவதற்காக, தனியார் உரிமையாளர்களிடமிருந்து ஏலங்களைக் கோரப்போவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ALSO READ: இந்தியாவில் பிக் பாஷ் லீக்கின் முதல் போட்டி எப்போது? எங்கு நடைபெறுகிறது?
ஆனால், வீரர்களுடனான ஊதிய ஒப்பந்தம் உட்பட ஒரு புதிய உடன்பாட்டை எட்டுவதற்கு இரு அமைப்புகளும் இன்னும் உடன்படவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ACA) தலைமை நிர்வாக அதிகாரி பால் மார்ஷ் கூறினார். cricket.com.au-வில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த ஃபிரான்சைஸின் புதிய உரிமையானது 2027-28 பிக் பாஷ் லீக் மற்றும் மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) சீசன்கள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும், இந்த விற்பனை செயல்முறையானது BBL மற்றும் WBBL-இன் வரவிருக்கும் சீசன்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் இயக்கப்படுகிறது. மற்ற கிளப்புகளையும் விற்பனைக்கு வைப்பது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா பரிசீலிக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகியவை தனியார் முதலீட்டில் ஆர்வம் காட்டும் மற்ற கிளப் அணிகளாகும். இருப்பினும், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் போன்ற மற்ற அணிகள் தற்போது தனியார் முதலீட்டில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இந்த அணிகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, சம்பள உச்சவரம்புகள் மற்றும் ஊடக உரிமைகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தக்கவைத்துக் கொள்ளும் என்று அதன் தலைவர் மைக் பெயர்ட் கூறினார். இதுகுறித்து பேசிய பெயர்ட், “பிக் பாஷ் லீக்கில் தனியார் முதலீட்டிற்கு வழி திறப்பதன் மூலமும், வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சமூக கிரிக்கெட் மற்றும் அடிமட்டப் பங்கேற்பிலும், உயர் மட்ட கிரிக்கெட்டிலும் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலமும், விளையாட்டின் நீண்டகால எதிர்காலத்தை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என்று கூறினார்.
ALSO READ: கேப்டனுக்கே தெரியாதா? பாக் கிரிக்கெட்டில் அடிக்கும் புயல்.. இப்படியுமா நடக்கும்?
ஏசிஏ தலைமை நிர்வாக அதிகாரி மார்ஷ் கூறுகையில், “வீரர்கள் சங்கம் தனியார் முதலீட்டை வரவேற்கிறது. ஆனால், புதிய அணி உரிமையாளர்களை உள்ளடக்கிய ஒரு புதிய ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்த முறை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். பல முக்கியப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன, மேலும் இரு தரப்பினரும் ஒரு புதிய உடன்பாட்டை எட்டுவதற்கு தற்போது வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது,” என்றார்.