Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறதா? வெளியான அட்டவணை!
Asian Games 2026 Cricket Schedule: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்றின் 'ஏ' பிரிவில் நேபாளம், ஜப்பான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் மலேசியா, ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்ற 4 காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடவர் (Indian Cricket Team) மற்றும் மகளிர் கிரிக்கெட் (Indian Womens Cricket Team) போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் மொத்தம் 10 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 6 அணிகள் முதல் சுற்றில் விளையாடும். ஆப்கானிஸ்தான், ஹாங்காங், மலேசியா, நேபாளம், ஜப்பான் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் முதல் சுற்றில் விளையாடும். இதில், 2 இடங்களைப் பெறும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
ALSO READ: காமன்வெல்த் 2022 போட்டியில் இடம்பெற்ற கிரிக்கெட் 2026ல் நீக்கம் – காரணம் என்ன?




ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் காலிறுதிச் சுற்றுடன் தொடங்குகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜப்பானையும், வங்கதேசம் சீனாவையும், பாகிஸ்தான் தாய்லாந்தையும், இலங்கை மலேசியாவையும் எதிர்கொள்ளும். வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய ஆடவர் அணியின் போட்டி எப்போது..?
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 24ம் தேதி தொடங்கும். இப்போட்டிகள் டி20 வடிவத்தில் முழு சர்வதேசத் தகுதியுடன் நடைபெறுவதால், பல இளம் வீரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டுமே நடப்பு சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை மட்டுமே மோதும் இந்தியா-பாகிஸ்தான்:
Here’s the format for the men’s event in the 𝐀𝐬𝐢𝐚𝐧 𝐆𝐚𝐦𝐞𝐬 this year ⤵️ https://t.co/yjymZmrGD2 pic.twitter.com/Ep60efQf3p
— Cricbuzz (@cricbuzz) July 24, 2026
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்றின் ‘ஏ’ பிரிவில் நேபாளம், ஜப்பான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மலேசியா, ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்ற 4 காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும். இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் ஒருமுறை மட்டுமே நேருக்கு நேர் மோத முடியும்.
ALSO READ: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதம் – ஜிம்பாப்வே அணியை எளிதாக வீழ்த்திய இந்தியா
இந்திய மகளிர் அணிக்கு அனுபவமிக்க ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக இருப்பார். இந்திய ஆடவர் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கும் நிலையில், திலக் வர்மா துணை கேப்டனாக தொடர்வார். வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.