AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதம் – ஜிம்பாப்வே அணியை எளிதாக வீழ்த்திய இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 18 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி அணியின் வெற்றிக்கு உதவினார். இது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதம் – ஜிம்பாப்வே அணியை எளிதாக வீழ்த்திய இந்தியா
இந்திய அணி அபார வெற்றி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Jul 2026 20:58 PM IST

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 18 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி அணியின் வெற்றிக்கு உதவினார். இது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியை எளிதாக வீழ்த்திய இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இன்று களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் துவக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரியான் பர்ள், வெஸ்லீ மத்வேர், மருமனி உள்ளிட்ட வீரர்கள் அணியை சரிவிலிலருந்து மீட்க முயன்றனர். ஆனால் அவர்களாலும் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

இதையும் படிக்க : காமன்வெல்த் விளையாட்டு : தங்கப் பதக்கத்தில் எவ்வளவு தங்கம் இருக்கும்?

இதனையடுத்து ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் ஷிவம் துபே மற்றும் ரவி பிஸ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷி இஷான் கிஷனுடன் இணைந்து ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். 18 பந்துகளில் அரை சதம் அடித்து சர்வதேச போட்டியில் குறைந்த வயதில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இருப்பினும் அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க : முதலில் சோகம்.. பிறகு வேகம்.. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா ஜொலித்த கதை!

அவருடன்  இஷான் கிஷனும் வெகு நேரம் நீடிக்கவில்லை. 24 பந்துகளில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து கடைசியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா இணைந்து 13.2 ஓவர்களில் அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இதனையடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. இது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் தோல்விக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

Follow Us