AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ZIM: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. அதிரடி அணியை அறிவித்த ஜிம்பாப்வே..!

Zimbabwe T20 Squad vs India: ஷ்ரேயாஸ் ஐயரின் (Shreyas Iyer) தலைமையின் கீழ் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல்-ரவுண்டர் வெஸ்லி மதேவெரே அணிக்குத் திரும்பியுள்ளார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தஃபத்ஸ்வா சிகா முதல் முறையாக சர்வதேச டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs ZIM: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. அதிரடி அணியை அறிவித்த ஜிம்பாப்வே..!
ஜிம்பாப்வே அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jul 2026 14:37 PM IST

இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சிகந்தர் ராசா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணியில் பல அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டி நாளை அதாவது 2026 ஜூலை 23ம் தேதி ஹராரேவில் நடைபெறும். ஷ்ரேயாஸ் ஐயரின் (Shreyas Iyer) தலைமையின் கீழ் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல்-ரவுண்டர் வெஸ்லி மதேவெரே அணிக்குத் திரும்பியுள்ளார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தஃபத்ஸ்வா சிகா முதல் முறையாக சர்வதேச டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ALSO READ: தனித்துவமான போட்டி நேரத்தில் தொடங்கும் இந்தியா – ஜிம்பாப்பே தொடர்.. எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

பல இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, டி20 தொடரின் முதல் போட்டியில் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகும். வரலாற்று ரீதியாக, இந்தியாவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த 2 தொடர்களைக் கருத்தில் கொண்டால், ஜிம்பாப்வேயை குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர். இந்தியாவும் ஜிம்பாப்வேயும் இதுவரை 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 11 முறையும், ஜிம்பாப்வே 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஜிம்பாப்வே டி20 அணி

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், தனகா சிவாங்கா, பென் குரான், பிராட் எவன்ஸ், வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நகர்வா, நியூமன் நயமுரி, மில்டன் ஷும்பா.

இந்திய டி20 அணி


ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சிவம் துபே, ரின்கு சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), பிரபாசிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), யாஷ் தாக்கூர், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யா, ஷரிவ் மே, அஷோக் ஷரினோ.

ALSO READ: இந்திய அணி ஆதிக்கம் நிறைந்த அணியா..? சவால் விட்ட ஜிம்பாப்வே கேப்டன்!

இந்தியா – ஜிம்பாப்வே டி20 தொடரின் முதல் போட்டியானது நாளை அதாவது ஜூலை 23ம் தேதி நடைபெறும். 2வது மற்றும் 3வது போட்டிகள் முறையே 2026 ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த 3 போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும்.

Follow Us