AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ZIM: இந்திய அணி ஆதிக்கம் நிறைந்த அணியா..? சவால் விட்ட ஜிம்பாப்வே கேப்டன்!

Sikandar Raza Open Challenge: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கடினமான ஒருநாள் தொடரிலிருந்து திரும்பும் இந்திய அணிக்கு எதிராக, போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே அணி ஒரு வாய்ப்பை எடுக்கக் காத்திருக்கிறது. பெல்ஃபாஸ்டில் அயர்லாந்திடம் 0-2 என்ற கணக்கில் டி20 தொடரை இந்தியா இழந்தது.

IND vs ZIM: இந்திய அணி ஆதிக்கம் நிறைந்த அணியா..? சவால் விட்ட ஜிம்பாப்வே கேப்டன்!
ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jul 2026 08:00 AM IST

இந்திய அணி அடுத்தடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை இழந்துள்ளது. தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேக்கு (IND vs ZIM) எதிரான தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாளே மீதமுள்ளன. இந்திய அணி இந்தத் தொடரை வென்று, டி20 வடிவத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த மீண்டும் களமிறங்கும். ஷ்ரேயாஸ் ஐயரும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வெல்ல விரும்புவார். ஏனெனில் ஷ்ரேயாஸ் தலைமையில் இந்தியா அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணி (Indian Cricket Team) தொடரை வெல்ல தன்னால் முடிந்தவரை முயற்சிக்கும். ஆனால் தற்போது ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா இந்திய அணி குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: தனித்துவமான போட்டி நேரத்தில் தொடங்கும் இந்தியா – ஜிம்பாப்பே தொடர்.. எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

இந்தியா வலுவான போட்டியாளர்கள் என்ற கூற்றுகளை ஜிம்பாப்வே டி20 கேப்டன் சிகந்தர் ராசா நிராகரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். மேலும், இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்பு உள்ளது. ஆனால், ஜிம்பாப்வே மிகவும் சீராகவும் சுவாரஸ்யமாகவும் கிரிக்கெட் விளையாடி வருகிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.,” என்று அவர் வலியுறுத்தினார். வென்றாலும் தோற்றாலும், தொடரைக் கைப்பற்ற இரு நாடுகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து வருகிறது, இது தொடரை சுவாரஸ்யமாக்கும். இந்தியா ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து வருகிறது, ஓரளவிற்கு ஜிம்பாப்வேயும் சில மாற்றங்களைக் காணும். இந்தத் தொடர் ஒருதலைப்பட்சமானது என்று நான் நினைக்கவில்லை.” என்றார்.

இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டிகள் முறையே 2026 ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதே மைதானத்தில் நடைபெறும்.

ALSO READ: உலகக்கோப்பைக்கு தகுதி பெற வேண்டுமா? வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி தேதியை நிர்ணயித்த ஐசிசி!

சிறப்பாக செயல்படும் ஜிம்பாப்வே:

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கடினமான ஒருநாள் தொடரிலிருந்து திரும்பும் இந்திய அணிக்கு எதிராக, போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே அணி ஒரு வாய்ப்பை எடுக்கக் காத்திருக்கிறது. பெல்ஃபாஸ்டில் அயர்லாந்திடம் 0-2 என்ற கணக்கில் டி20 தொடரை இந்தியா இழந்தது. அதைத் தொடர்ந்து, புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இங்கிலாந்திடம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. சுப்மன் கில் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரையும் 1-2 என்ற கணக்கில் இழந்தது. கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் கொழும்பில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை தொடரிலிருந்து வெளியேற்றி ஜிம்பாப்வே அதிர்ச்சி அளித்தது. இந்த 2026ம் ஆண்டு ஜிம்பாப்வே அணியானது இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

Follow Us