AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: முடிந்த இங்கிலாந்து தொடர்.. இந்திய ஜெர்ஸியில் அடுத்து ரோஹித், கோலி எப்போது களமிறங்குவார்கள்?

Rohit Sharma - Virat Kohli: இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடரானது வருகின்ற 2026 செப்டம்பர் மாதம் விளையாடவுள்ளது. இதன் காரணமாக, அந்த இரு ஜாம்பவான்களும் இணைந்து விளையாடுவதைக் காண ரசிகர்கள் கிட்டத்தட்ட 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு, இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

Team India: முடிந்த இங்கிலாந்து தொடர்.. இந்திய ஜெர்ஸியில் அடுத்து ரோஹித், கோலி எப்போது களமிறங்குவார்கள்?
விராட் கோலி - ரோஹித் சர்மாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jul 2026 08:00 AM IST

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், இந்தத் தொடரில் இந்திய அணி (Indian Cricket Team) ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்திய அணியை 1-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனாலும், தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது. இந்தத் தொடர் முடிவடைந்த பிறகு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான் உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் ஷர்மாவையும் (Rohit Sharma) விராட் கோலியையும் மீண்டும் எப்போது இந்திய அணியின் ஜெர்சியில் பார்க்கலாம் என்பதுதான்.

ALSO READ: சதம் அடித்தும் சந்தோஷம் இல்லாத ரோஹித்.. கம்பீருடன் காரசார விவாதம்!

இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் எப்போது?

இந்திய கிரிக்கெட்டின் இந்த இரண்டு ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். எனவே, இங்கிலாந்து தொடருக்கு பிறகு இந்த இரு ஜாம்பவான்களையும் இந்திய ஜெர்சியில் காண கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்..?

இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடரானது வருகின்ற 2026 செப்டம்பர் மாதம் விளையாடவுள்ளது. இதன் காரணமாக, அந்த இரு ஜாம்பவான்களும் இணைந்து விளையாடுவதைக் காண ரசிகர்கள் கிட்டத்தட்ட 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு, இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது. 2026 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், வருகின்ற 2026 அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறும். இதில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி: 2026 செப்டம்பர் 27 (திருவனந்தபுரம்)
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: 2026 செப்டம்பர் 30 (கவுகாத்தி)
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: 2026 அக்டோபர் 3 (நியூ சண்டிகர்)

ALSO READ: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பு.. முன்னாள் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் இதுதான்!

இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு, இந்திய அணி வருகின்ற 2026 நவம்பர் மாதம் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும். 2027 ஐசிசி உலகக் கோப்பைக்கு முன்பு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக இருக்கும். அதன்பிறகு, ஆண்டின் கடைசி மாதமான 2026 டிசம்பரில், இந்தியா மீண்டும் இலங்கைக்கு எதிராக ஒரு உள்நாட்டுத் தொடரில் விளையாடு. அதில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.

Follow Us