AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs Eng: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பு.. முன்னாள் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் இதுதான்!

Indian Cricket Team New Coach: இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் விளையாடிய மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20ஐ அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், லார்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்குப் பிறகு லண்டனிலிருந்து நேரடியாக அணியில் இணைவார்கள். மீதமுள்ள இளம் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மனின் மேற்பார்வையில் ஏற்கனவே இந்தியாவிலிருந்து புறப்பட்டுவிட்டனர்.

IND vs Eng: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பு.. முன்னாள் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் இதுதான்!
இந்திய அணியின் பயிற்சியாளர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Jul 2026 08:00 AM IST

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது இங்கிலாந்துக்கு (IND vs ENG ODI Series) எதிரான விறுவிறுப்பான ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தி வருவதுடன், வரும் நாட்களில் தொடங்கவிருக்கும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் குறித்தும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த அடுத்தடுத்த கிரிக்கெட் அட்டவணை, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருவருக்கும் சவாலாக அமைகிறது. இந்தச் சூழலில், பிசிசிஐ மிகவும் புத்திசாலித்தனமான ஒரு முடிவை எடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று அதாவது 2026 ஜூலை 19ம் தெதி நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி முடிந்த உடனேயே, இந்திய அணி (Indian Cricket Team) வருகின்ற 2026 ஜூலை 23ம் தேதி முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் விளையாடும்.

ALSO READ: தொடர் சொதப்பல்.. ரோஹித் சர்மா முடிவு என்ன? பிசிசிஐ சொன்ன பாசிட்டிவ் செய்தி!

அடுத்தடுத்த கிரிக்கெட் அட்டவணை:

இந்த மிகவும் பரபரப்பான கால அட்டவணை காரணமாக, பயிற்சியாளர்களின் பணிச்சுமையையும் சமாளிப்பதற்காக, பிசிசிஐ ஒரு தனித்துவமான உத்தியைக் கையாண்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மூத்த ஒருநாள் அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் வேளையில், இந்திய அணியின் புதிய, இளம் வீரர்கள் குழு ஒன்று, புதிய மற்றும் மிகுந்த அனுபவம் வாய்ந்த தலைமைப் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஜிம்பாப்வேக்குப் புறப்பட்டுள்ளது. இந்த வீரர்களின் பயணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியான உடனேயே, காம்பீர் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளர் யார் என்பது குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பேச்சு எழுந்தது.

இந்திய அணியின் வழக்கமான தலைமைப் பயிற்சியாளரான கவுதம் காம்பீர், தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். அங்கு, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 19 அன்று நடைபெறுகிறது. காம்பீர், ஒருநாள் தொடர் முடியும் வரை இந்திய அணியுடன் இங்கிலாந்திலேயே தங்கியிருப்பார். இதன் விளைவாக, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்காக, பெங்களூருவைச் சேர்ந்த ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ தலைவரும் முன்னாள் இந்திய வீரருமான வி.வி.எஸ். லட்சுமணனை இந்திய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது. பயிற்சி ஊழியர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக பிசிசிஐ இந்த நடவடிக்கையை பலமுறை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்தில் பல சுற்றுப்பயணங்களில்வி.வி.எஸ். லட்சுமணன் இதற்கு முன்பும் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் விளையாடிய மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20ஐ அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், லார்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்குப் பிறகு லண்டனிலிருந்து நேரடியாக அணியில் இணைவார்கள். மீதமுள்ள இளம் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மனின் மேற்பார்வையில் ஏற்கனவே இந்தியாவிலிருந்து புறப்பட்டுவிட்டனர். இந்த இளம் டி20ஐ அணியில், சர்வதேச அளவில் தடம் பதிக்க ஆர்வமுள்ள புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், விவிஎஸ் லக்ஷ்மனின் வழிகாட்டுதல் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ALSO READ: லார்ட்ஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி..? இந்திய அணிக்கு சாதகமா? முழு விவரம்!

இந்தியா – ஜிம்பாப்வே டி20 தொடரின் முழு அட்டவணை:

  • முதல் டி20 போட்டி: 2026 ஜூலை 23 – ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • இரண்டாவது டி20 போட்டி: 2026 ஜூலை 25, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • மூன்றாவது டி20 போட்டி: 2026 ஜூலை 26, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரின்கு சிங், ஹர்ஷ் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், யாஷ் சிங், குல்தீப் யாதவ், அசோக் ஷர்மா

Follow Us